ஆல் ரவுண்டருக்கு ஏற்பட்ட சோதனை.. குடும்ப சண்டையை தெருவிற்கு  இழுத்துவிட்ட ஹர்திக் பாண்டியாவின் மனைவி!

All-rounder Hardik Pandya is struggling in family life: “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!” என்பது போல், குடும்பம் மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் நிகழும் கசப்பான சம்பவங்களால் ஹர்திக் பாண்டியா நொந்து வெந்து போய் உள்ளார் என்பது மட்டும் உண்மை.

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளங்கும் ஹர்திக் பாண்டியா, தான் எடுக்கும் தவறான முடிவுகளால் ரசிகர்களின் பலத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார்.

அதுமட்டுமின்றி வருகின்ற டி20 விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கணித்த நிலையில் அதுவும் இல்லாமல் போனது.

வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி நடக்கவுள்ள டி20 விளையாட்டுப் போட்டிகளில் துணை கேப்டனாக களம் இறங்க உள்ளார் பாண்டியா.

இவ்வாறு கிரிக்கெட்டில் தனது சறுக்கலை ஆரம்பித்த பாண்டியாவிற்கு குடும்ப வாழ்க்கை மேலும் இன்னலாக அமைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா செர்பியா நாட்டு மாடல் நடாஷா என்பவரை காதலித்து கரம் பிடித்தார்.

ஏற்கனவே நடாஷா உடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஹர்திக் பாண்டியா,  குழந்தை பிறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனைவியின் ஆசையை நிராசையாக்கும் ஹர்திக் பாண்டியா

கொரோனா காலகட்டத்தில்  தனிப்பட்ட முறையில் திருமணம் செய்ததால், 2023 ஆண்டு பிரம்மாண்ட முறையில் மீண்டும் திருமணம் செய்து பலரது வாழ்த்துக்களையும் பெற்றிருந்தார்.

தற்போது கருத்து வேறுபாடு காரணமாக இந்த தம்பதிகளுக்கு இடையே விவாகரத்து பெறுவது குறித்த செய்திகள் பரவி வருகிறது.

அதனை உறுதி செய்யும் விதத்தில் பாண்டியாவின் மனைவி நடாஷா, செர்பியா நாட்டைச் சேர்ந்த உடற்பயிற்சியாளரான தனது ஆண் நண்பர் ஒருவருடன் டேட்டிங் செய்து வருகிறார்.

விவாகரத்து பற்றி கேட்டதற்கு எந்த ஒரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டாராம். மேலும் தனது இன்ஸ்டாவில் ஹர்திக் பாண்டியாவின் பெயரை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சமீபத்தில் வெளியிட்ட தனது இன்ஸ்டாவில் டிராபிக் குறியீடுகளுடன் “யாரோ ஒருவர் தெருவில் நிற்கப் போகிறார்!” என்பது போல் பதிவிட்டு உள்ளாராம்.

விவாகரத்து பெற்றால் ஹர்திக் பாண்டியாவின் 70%  சொத்துக்களை ஜீவனாம்சமாக பெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

ஏற்கனவே பாண்டியா தனது சொத்துக்கள் பலவற்றையும் தனது அம்மா பெயரில் எழுதி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜீவனாம்சம் கேட்கும் தனது மனைவியின் ஆசைக்கு ஆப்பு அடிக்க போகிறார் என்பது மட்டும் உண்மை.

ஹர்திக் பாண்டியா சந்தித்த கசப்பான சம்பவங்கள்

- Advertisement -