என்னை முடக்க செய்த பெரும் சூழ்ச்சி.. பல அதிர்ச்சி சம்பவங்களை வெளிப்படையாக சொன்ன ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா அடுத்த கபில்தேவ் என்று இவர் இந்திய அணிக்குள் தேர்வான பின் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள் ஆனால் அவருக்கும் வந்தது கெட்ட நேரம். தொடர்ந்து காயம் ஏற்படுவதும் அந்த காயத்தில் இருந்து மீண்டு வருவது என்று இவருடைய கிரிக்கெட் கேரியர் இருந்தது. ஆனால் எல்லாத் தடைகளையும் உடைத்து இப்பொழுது 20 ஓவர் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.

2019ஆம் ஆண்டில் உலக கோப்பை போட்டிகள் முடிந்தவுடன் காயம் காரணமாக அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார் ஹர்திக் பாண்டியா. அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவர்கள் அவருக்கு பந்து வீச தடை விதித்தனர். நீங்கள் பந்து வீசினால் அது உங்கள் கிரிக்கெட் கேரியரை கேள்விக்குறியாகிவிடும் என்று அவருக்கு முட்டுக்கட்டை போட்டனர்.

Also Read: ஐபிஎல் போட்டிகளால் உருவாகும் பிரச்சனை.. சீனியர் வீரரிடமே சண்டைக்கு போன ஹர்திக் பாண்டியா

பேட்டிங்கிலும் கான்சன்ட்ரேட் பண்ண முடியாமல், பந்து வீசுவதிலும் பிரச்சனையாகி பெரும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்திய ரசிகர்களிடம் இருந்து இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆல்ரவுண்டர் என்று கூறுகிறீர்கள் ஆனால் இவர் பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சரிவர விளையாடுவதில்லை என்று நாலாபுறமும் இருந்து இவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

இப்படியே விட்டால் நம் திறமை முழுவதும் வீணாகிவிடும் என்று இவர் மருத்துவரின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் பந்துவீச்சில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இரண்டு முதல் மூன்று ஓவர்கள் வீசி அதன் பின்னர் படிப்படியாக அதிக ஓவர்களை போட ஆரம்பித்தார். படிப்படியாக அதில் வெற்றியும் கண்டார்.

Also Read: உலக கோப்பை போட்டியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கமா? அவருக்கு ஆப்பு வைக்க போவது இவர்தானா

2021ஆம் ஆண்டு ஐபிஎல் மும்பைஅணி இவரை விடுவித்தது. அதன் பின்னர் புதிதாய் ஆரம்பிக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணி இவரை ஏலத்தில் எடுத்து, அந்த அணியின் கேப்டனாகவும் இவருக்கு பொறுப்பு கொடுத்தது. அதன் பின்னர் இவருக்கு ஏறுமுகம்தான் ஐபிஎல் போட்டிகளில் வெளுத்து வாங்கி கோப்பையை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காகா வென்று கொடுத்தார்.

பின்னர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்று ஆசிய கோப்பைகள், 20 ஓவர் உலக கோப்பை என எல்லா தொடரிலும் தனது சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இன்று 2023 ஆம் ஆண்டு இந்திய அணியில் 20 ஓவர் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read: அம்பானிக்காக அருமையாக விளையாடும் ஹர்திக் பாண்டியா.. ஆனால் இந்திய அணிக்கு?