ஆதரவில்லாமல் டம்மியாகும் ஹர்திக் பாண்டியா.. ரோஹித் மனசை கெடுக்கும் சிஎஸ்கே வீரர்

No Support For New Captain Hardik Pandya: இதுவரை 16 ஐபிஎல் சீசன்கள் நடந்து முடிந்துள்ளது. இதில் கிட்டத்தட்ட பத்து முறை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் சரிசமமாக வெற்றியை பகிர்ந்துள்ளது. இந்த இரு அணிகள் விளையாடும் போட்டிகள் ரசிகர்களிடையே கோலாகல கொண்டாட்டமாக இருக்கும்.

ஐபிஎல் போட்டிகளுக்கு இவ்விரு அணிகள் தான் ஒரு பெரிய அடையாளமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இப்பொழுது புயல் வீசுவதைப் போல் பல விஷயங்கள் 2024 சீசனில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் என்ற ஒரு புது அணி ஐபிஎல் போட்டியில் களம் கண்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹார்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். புதிதாக வந்த முதலாம் ஆண்டே அந்த அணி கோப்பையும் வென்றது. அதாவது 2022 ஆம் ஆண்டு ஹார்திக் பாண்டியா தலைமை தாங்கி அந்த அணிக்கு கோப்பையை பெற்று கொடுத்தார்.

Also Read: 2024 ஐபிஎல் சென்னை அணி வீரர்கள் விபரம்.. 2 புதுமுக ஆல்ரவுண்டர்களை வளைத்த தல தோனி

நடப்பு ஆண்டில் கூட குஜராத் டைட்டன்ஸ் அணி ஃபைனல் வரை முன்னேறியது. இப்படி ஹர்திக் பாண்டியாவிற்கு நல்ல முன்னேற்றமும் கொடுத்து வளர்ந்து வரும் அணியாக இருக்கும் பட்சத்தில் திடீரென மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் வளைத்து போட்டு அவருக்கு கேப்டன் பொறுப்பும் கொடுத்துள்ளது.

ஐந்து முறை கோப்பையை வாங்கிக் கொடுத்த ரோகித் சர்மா மும்பை அணியில் இருக்கும்போது இவருக்கு கேப்டன் பொறுப்பு கொடுத்தது படுபாதக செயலாக பார்க்கப்படுகிறது. அணி வீரர்களிடையே ஆதரவில்லாத கேப்டனாக தான் ஹர்திக் பாண்டியா இருப்பார் என்று முன்னணி கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ரோஹித் சர்மா வேறு ஒரு அணிக்காக விளையாடும் திட்டத்தில் இருப்பதாகவும் ஒரு பேச்சு போய்க் கொண்டிருக்கிறது.

Rohit-Csk
Rohit-Csk

பழைய சிஎஸ்கே வீரரான சுப்பிரமணிய பத்ரிநாத், தோனி ஓய்வு பெற போவது உறுதி அதனால் தான் இப்பொழுது இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்து வருகிறது. தோனி இல்லை என்றால் சென்னையை வழிநடத்த ரோகித் சர்மா தான் சிறந்த வீரர் என்றும் கூறி வருகிறார். மேலும் ரோகித் சர்மா சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்