ஹாலிவுட் படத்தை பட்டி டிங்கரிங் செய்த மகிழ் திருமேனி.. ஓடிடியில் பார்க்க குவியும் அஜித் வெறியர்கள்

Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் லைக்கா தயாரிக்கும் படம் தான் விடாமுயற்சி. கடந்த வருடமே ஆரம்பிக்கப்பட்ட இப்படம் பல பிரச்சனைகளை கடந்து தீபாவளி அன்று வெளிவர இருக்கிறது.

இதை ரசிகர்கள் கொண்டாடும் வேளையில் படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியானது. அதில் இரண்டாவதாக வெளியான போஸ்டர் இப்படம் ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டது.

அதன்படி 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கில படம் தான் பிரேக் டவுன். த்ரில்லர் முறையில் எடுக்கப்பட்ட இப்படத்தை தழுவி தான் விடாமுயற்சி உருவாகி கொண்டிருக்கிறது. ஜொனாதன் மோஸ்டோவ் இயக்கத்தில் வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலிலும் லாபம் பார்த்தது.

ஒரே நாளில் நடக்கக்கூடிய கதையில் ஹீரோ தன் மனைவியுடன் காரில் நெடுந்தூரம் பயணிப்பார். ஆனால் அவருடைய கார் பழுதடைந்த நிலையில் மனைவியும் மாயமாகி விடுவார், அதன் பிறகு ஹீரோ என்ன செய்தார் என்பது தான் படத்தின் கதை.

விடாமுயற்சியின் கதை

விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த பிரேக் டவுன் படம் அமேசான் பிரைம் தளத்தில் உள்ளது. தமிழ் டப்பிங்கில் இப்படம் இருப்பதால் தற்போது அஜித் வெறியர்கள் இதை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படி என்றால் படத்தின் ஆர்வம் குறைந்து விடுமே என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் மகிழ்திருமேனி கதையின் மையக்கருவை மட்டும் தான் எடுத்துள்ளார். மற்றபடி படத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும்.

அதேபோல் ஹாலிவுட் பட தழுவலாக இருந்தாலும் மகிழ் திருமேனி ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப அதை கொடுப்பதில் கில்லாடி. அதற்கு ஏற்றவாறு அஜித்தும் பல ரிஸ்க்கான காட்சிகளில் அசால்டாக நடித்து தள்ளி இருக்கிறார்.

அதனால் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வரும் இந்த விடாமுயற்சி நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் தரிசனத்தை காண ரசிகர்கள் இப்போது தயாராகி வருகின்றனர்.

ஹாலிவுட் படத்தை காப்பி அடித்த விடாமுயற்சி

Next Story

- Advertisement -