கங்குவா ரிலீசால் சிக்கலில் வேட்டையன், விடாமுயற்சி.. லைக்கா கழுத்தை பிடிக்கும் நெட்ஃபிளிக்ஸ்

Kanguva-Vettaiyan: ஜூன் மாத தொடக்கமே அமோகமாக இருக்கிறது. அடுத்தடுத்து டாப் ஹீரோக்கள் மற்றும் பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இதில் விஜய் சேதுபதியின் மகாராஜா 100 கோடியை தட்டி தூக்கி உள்ளது.

அதையடுத்து வெளியான கல்கி தற்போது வரை 600 கோடியை வசூலித்துள்ளது. இதை அடுத்து இந்தியன் 2 வெளிவர இருக்கிறது. அதை தொடர்ந்து விஜய்யின் கோட் செப்டம்பர் மாதம் வெளி வருகிறது.

இப்படி அடுத்தடுத்து படங்கள் வெளிவரும் நிலையில் சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் அக்டோபர் 10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கு போட்டியாக கங்குவா அதே நாளில் ரிலீஸ் என்ற அறிவிப்பும் வந்துள்ளது.

இதுதான் இப்போது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படம் வெளிவருகிறது என்றாலே எந்த படமும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு ரிலீஸ் ஆகாது. அப்படி இருக்கும் போது கங்குவா வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேசமயம் இரண்டு படங்களும் மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. இப்படி ஒரே நாளில் ரிலீஸ் என்றால் வசூல் நிச்சயம் பாதிக்கப்படும். அதனால் ஏதாவது ஒரு படம் பின்வாங்கும் என சொல்லப்படுகிறது.

தாமதமாகும் விடாமுயற்சி

மேலும் இந்த இரண்டு படங்களையும் வாங்கியது அமேசான் ப்ரைம் நிறுவனம் தான். படம் வெளியாகி 28 நாட்களுக்குப் பிறகே அது டிஜிட்டலுக்கு வரும். அப்படி என்றால் அமேசான் இரண்டையும் ஒரே நாளில் வெளியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இது நிச்சயம் பிசினஸை பாதிக்கும். அதனால் இரண்டு படங்களின் மோதலையும் தவிர்க்க வேண்டும் என அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு தயாராகி வருகிறது. இது ஒரு புறம் இருக்க லைக்காவின் மற்றொரு தயாரிப்பான விடாமுயற்சியை நெட்ஃப்ளிக்ஸ் 70 கோடி கொடுத்து வாங்கி இருக்கிறது.

அதனால் படம் நவம்பருக்கு முன் வெளிவந்தே ஆக வேண்டும் என அவர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். இல்லையென்றால் இந்த ஒப்பந்தத்தை கேன்சல் செய்து விடுவோம் எனவும் பிளாக்மெயில் செய்கிறார்களாம்.

ஒருவேளை வேட்டையன் தீபாவளிக்கு தள்ளிப் போனால் விடா முயற்சி நிச்சயம் டிசம்பர் மாதம் தான் வெளியாகும். ஏனென்றால் இன்னும் படப்பிடிப்பு முடியவில்லை. அதில் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அஜித் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

இதனால் விடாமுயற்சி சிறிது தாமதமாகும். இப்படி பல இடியாப்ப சிக்கல்களுக்கு நடுவில் லைக்கா திணறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பல பஞ்சாயத்தால் தயாரிப்பை விட்டு விடலாமா என அவர்கள் யோசித்து வருகின்றனர். இதில் கங்குவா ரிலீஸ் மேலும் தலைவலியை கொடுத்துள்ளது.

கங்குவா ரிலீஸால் திணறும் லைக்கா

Next Story

- Advertisement -