விஜய்க்கு போட்டியாக இறங்க நேரம் பார்க்கும் அஜித்.. ரமேஷ் கண்ணா வைத்த ட்விஸ்ட்

Actor Vijay-Actor Ajith: காமெடி, குணச்சித்திரம் என பல கேரக்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ரமேஷ் கண்ணா விஜய், அஜித் இருவருக்கும் பொதுவான நண்பர். இவர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் தற்போது விஜய்க்கு போட்டியாக அஜித் களமிறங்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று கூறியிருப்பது அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

அஜித்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இவர் அவரை வைத்து தொடரும் என்ற திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார். அதனாலேயே இவர்களுக்குள் நெருங்கிய நட்பும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவர் ஒரு பேட்டியில் விஜய், அஜித் பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

Also read: மாவட்ட எஸ்.பி-யாக ரவுண்டு அடிக்க போகும் ரஜினி.. தலைவரின் அடுத்த படத்திற்கான புது அப்டேட்

அப்போது விஜய் இப்போது அரசியலுக்கு வரும் அறிகுறி வெளிப்படையாகவே தெரிகிறது. அதேபோன்று அஜித்தும் வருகிறார் என்றால் நீங்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ரமேஷ் கண்ணா தன் நண்பர்கள் இருவருக்கும் ஆதரவாகவே பேசினார்.

அதாவது இரண்டு பேரும் அரசியலில் இறங்குகிறார்கள் என்றால் அவர்களோடு நான் இருப்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் இப்போது விஜய் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இருப்பதால் நான் அவரோடு சேர்ந்து கொள்வேன் எனவும் கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஒருமுறை நான் அஜித்திடம் அரசியல் பற்றி பேசும்போது வாயை மூடிட்டு சும்மா இருக்கியா என்பது போன்று செய்கை செய்வார்.

Also read: வெற்றியை கொண்டாட, விஜய் பரிசளித்த 5 பிரபலங்கள்.. 400 கோல்ட் ரிங் கொடுத்த தளபதி

ஆனால் அவர் அரசியலுக்கு வந்தாலும் வரலாம் என ரமேஷ் கண்ணா ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். எப்படி என்றால் இப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கூறிவிட்டு ஒதுங்கி விட்டார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத நேரம் பார்த்து கமல் களத்தில் இறங்கினார். அதுபோல் அஜித் விஷயத்திலும் நடப்பதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

ஒருவேளை அஜித் சரியான நேரம் வருவதற்காக காத்திருக்கலாம். அப்படி வந்தால் அவருக்காக நான் இருப்பேன் என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் விஜய்க்கு போட்டியாக அஜித்தும் களம் காண்பார் என சொல்லாமல் சொல்லி இருக்கிறார். தற்போது ரமேஷ் கண்ணா கூறி இருக்கும் இந்த விஷயம் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அதில் ஒரு ட்விஸ்ட் இருப்பதால் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

Also read: சிங்கத்தை தாண்டி லியோவில் இடம்பெறும் விலங்கு.. லோகேஷை நம்பி பல கோடி செலவு செய்த லலித்

Next Story

- Advertisement -