வெற்றியை கொண்டாட, விஜய் பரிசளித்த 5 பிரபலங்கள்.. 400 கோல்ட் ரிங் கொடுத்த தளபதி

Actor Vijay: தன் திறமையால் அடுத்த கட்ட முயற்சிகளில் அடி எடுத்து வைத்து வெற்றி காணும் விஜய், தற்பொழுது மேற்கொள்ளும் படம் தான் லியோ. இந்நிலையில் இவரிடம் பரிசு வாங்கிய பிரபலங்களை பற்றி சில குறிப்புகளை இங்கு காண்போம்.

வாரிசு நடிகராய், தனக்கு கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தன்னை மேன்படுத்திக் கொள்ளும் சிறந்த நடிகர் தான் விஜய். இவரின் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை. இவர் படத்தின் அப்டேட்-ற்கு காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம்.

Also read: விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது.. தேவையில்லாமல் சீண்டி வாங்கி கட்டிய பிரபலம்

அவ்வாறு நகைச்சுவையில் தொடர்ந்து முயற்சி செய்து வரும் யோகி பாபுவிற்கு விஜய் அவர்கள் கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசளித்துள்ளார். இவரின் காமெடிகள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும் என்பதால் அன்பை பாராட்டி இவருக்கு இப்பரிசு அளிக்கப்பட்டதாம்.

அதை தொடர்ந்து 2017ல் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த மெர்சல் படத்தில் விஜய்யின் மகனாக நடித்த அக்ஷத்திற்கு, அவரின் பிறந்த நாளை ஒட்டி கேமரா ஒன்று பரிசளித்துள்ளார் விஜய். மேலும் 2014ல் விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் மாபெரும் வெற்றியை கொடுத்ததன் அடிப்படையில், அப்படத்தின் பாடலை பாடிய அனிருத்தற்கு பியானோ ஒன்று பரிசளித்துள்ளார்.

Also read: முதல்வர் ஆசை இருந்தா மட்டும் போதாது.. லியோ பாடலை கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை

மேற்கொண்டு இவர் பாடலின் மூலம் பல வெற்றிகளை பெற வேண்டும் என்பதற்காகவும், மேலும் படத்தின் வெற்றிக்காகவும் இது போன்ற செயலை செய்துள்ளார் விஜய். மேலும் 2005ல் வெளிவந்த திருப்பாச்சி படத்தின் வெற்றிக்காக அப்படத்தின் இயக்குனரான பேரரசுக்கு மாருதி ஸ்விஃப்ட் கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.

அதிலும் குறிப்பாக, 2019ல் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த பிகில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சுமார் 400 கோல்ட் ரிங் அப்படத்தில் பணி புரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார் விஜய். இவர் இது போன்ற பல அன்பளிப்புகள் மூலம் தன் வெற்றியை கொண்டாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய் பிறந்தநாளில் திரிஷா வெளியிட்ட புகைப்படம்.. 14 வருடங்கள் ஆகியும் மாறாத கெமிஸ்ட்ரி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்