திரும்புற பக்கமெல்லாம் பிரச்சனையாவே இருக்கே.. புஷ்பா 2வால் அஜித்துக்கு வந்த சிக்கல்

Ajith: அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. அதை தொடர்ந்து 2ம் பாகமும் மூன்று வருடங்களாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை மாற்றும் நிலைக்கு வந்தனர். ஆனால் இப்போது திடீரென புஷ்பா 2 டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளிப்போன புஷ்பா 2 ரிலீஸ்

இது கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த செய்தி தான். ஆனால் தயாரிப்பு நிறுவனமே இப்போது இதை அறிவித்திருப்பது அல்லு அர்ஜுன் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

மேலும் படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருப்பதால் ரிலீஸ் தள்ளி போயிருப்பதாக கூறுகின்றனர். இது ஒரு புறம் இருக்க இப்படத்தால் குட் பேட் அக்லிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம்.

லைக்கா தயாரிப்பில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி பல இடியாப்ப சிக்கலில் உள்ளது. அதனாலயே அவர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் கூட்டணி அமைத்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்காக அஜித்துக்கு இதுவரை இல்லாத அளவுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது.

அதற்கேற்றார் போல் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. ஆனால் இப்போது புஷ்பா 2 வருட கடைசிக்கு தள்ளிப் போய்விட்டது. அதனால் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த குட் பேட் அக்லி சம்மருக்கு வரும் என்ற பேச்சு அடிபடுகிறது.

மேலும் விடாமுயற்சி பொங்கலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். ஆக மொத்தம் அஜித்துக்கு சுற்றி சுற்றி பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது. இருந்தாலும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

அஜித் படத்திற்கு தொடர்ந்து வரும் சிக்கல்கள்

Next Story

- Advertisement -