3 நாள் சூட்டிங் போன பிறகும் முடியாதுன்னு ஒதுங்கிய அஜித்.. பணம் தான் முக்கியம்னு ஏ கேவை ஒதுக்கிய இயக்குனர்

அஜித் கொஞ்சம் இல்லை நிறையவே மரியாதை எதிர்பார்க்கக் கூடிய ஒரு நடிகர். இப்படி இவரிடம் கொஞ்சம் ஏடாகூடமாக நடந்து கொண்டவர்களை ஒதுக்கி அவர்களிடமிருந்து விலகிவிடுவார். அப்படி அஜித் ஒதுக்கியவர்கள் பல பேர்.எப்பொழுதுமே தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் அஜித் குமார். ஆரம்பத்தில் அவர் பல சங்கடங்களை கண்டு இன்று அதில் இருந்து முற்றிலும் விலகி விட்டார்

இயக்குனர் பாலா, மதுரை அன்புச் செழியன் போன்ற பல பேரை அஜித் ஒதுக்கி வைத்து விட்டார். அஜித் பிரபலமான இயக்குனர் ஒருவரை அதுவும் அவருக்கு சூப்பர் ஹிட் படம் கொடுத்த ஒருவரை தன்னுடைய நினைப்பில் இருந்தே நீக்கி விட்டார். அஜித்திடம் உண்மையாக இருப்பது போல் காட்டி பின்னாடி பல வேலைகள் செய்துள்ளார் அந்த இயக்குனர்.

Also read: டபுள் மடங்கு சம்பளம், டபுள் ஓகே சொன்ன குணசேகரன்.. நாங்க என்ன தக்காளி தொக்கா, நெருக்கடியில் சன் டிவி

புதுமுக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸை கூப்பிட்டு வாய்ப்பு கொடுத்தார் அஜித் குமார். அப்படி இவர்கள் கூட்டணியில் அமைந்த படம் தான் தீனா. ஒரு இயக்குனருக்கு சரியான மாஸ் என்ட்ரி கிடைத்த படம். அதேபோல் அஜித்துக்கும் அந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது .இப்படி இருக்கையில் இதே கூட்டணி அடுத்து மிரட்டல் என்ற ஒரு படம் மூலம் கைகோர்த்தது.

படம் மூன்று நாள் சூட்டிங் போய் உள்ளது. படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் சக்கரவர்த்திக்கும் அஜித்துக்கும் சில பிரச்சனைகள் உருவாகியது.அஜித் படத்தை நிப்பாட்டி விடலாம் என முருகதாஸ் இடம் கூறி நான் உங்களுக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் பார்த்து கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். சரி என்று அஜித் பக்கமே நிற்பது போல் நின்று காலை வாரிவிட்டுள்ளார் முருகதாஸ்.

Also read: படுஜோராக நடந்த தலைவர் 170 பட பூஜை.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹேண்ட்ஸம் லுக்கில் ரஜினி

அஜித்திடம் கூறாமலே அதே தயாரிப்பாளர் உடன் கூட்டணி போட்டு சூர்யாவை வைத்து கஜினி என்ற படத்தை எடுத்துள்ளார். படம் டிராப் ஆனதை நினைத்து அஜித் வேறு ஒரு தயாரிப்பாளரை தேடிக் கொண்டிருக்கும்போது முருகதாஸ் இப்படி செய்து விட்டார். பணம்தான் முக்கியம் என்று முருகதாஸ் சென்றதால் இன்று வரை அஜித் அவரை ஒதுக்கிய விட்டுவிட்டார்.

இப்பொழுது முருகதாஸ் எந்த ஒரு படமும் இன்றி கஷ்டப்பட்டு வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயனை வைத்து இப்பொழுது ஒரு படத்தை எடுக்கவிருக்கிறார். சமீபத்தில் விஜய்க்கு ஒரு கதை சொல்லி அவரும் அதை நிராகரித்து விட்டார். அதிலிருந்து தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் வேறு எந்த மொழியிலும் ஹீரோக்கள் இவருக்கு கால் சீட் கொடுக்க தயங்குகின்றனர்.

Also Read:சத்தம் இல்லாமல் அஜித் செய்யும் பெரிய விஷயம்.. என்ன மனுஷன் இவரு, அதான் சாமின்னு கொண்டாடுறாங்க

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்