ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

படுஜோராக நடந்த தலைவர் 170 பட பூஜை.. ஆளே அடையாளம் தெரியாமல் ஹேண்ட்ஸம் லுக்கில் ரஜினி

Thalaivar 170: ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிக்க இருக்கும் தலைவர் 170 ஆவது படத்தின் பூஜை இன்று கோலாகலமாக தொடங்கிவிட்டது. அதாவது ஜெய் பீம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது நடிக்க இருக்கிறார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கப் போகிறது. அதற்கான பூஜை தான் இன்று திருவனந்தபுரத்தில் ஒட்டுமொத்த படக்குழுவுடன் சேர்ந்து துவங்கப்பட்டிருக்கிறது.

இதற்கான புகைப்படங்களை லைக்கா நிறுவனம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. தொடர்ந்து ரஜினி வெற்றிக் கூட்டணியுடன் பயணித்து வருகிறார் என்ற விஷயம் இவருடைய ரசிகர்களுக்கு பேரானந்தமாக இருக்கிறது. அதாவது ஞானவேல் இயக்கிய முதல் படம் ஜெய்பீம். இந்த படத்தின் கதை மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அமோக வரவேற்பை பெற்றது.

Also read: ரஜினி படத்தில் நடிக்க அமிதாப் வாங்கும் சம்பளம்.. விளம்பரத்துக்கே மிரள வைப்பவர் நண்பன்னா சும்மாவா.?

அந்த வகையில் இவருடைய இரண்டாவது படத்தில் ரஜினி மற்றும் லைக்கா கூட்டணி இணைந்து இருப்பது கண்டிப்பாக வசூல் அளவில் வேட்டையாட போகுது. மேலும் இந்த பட பூஜையில் ரஜினியை பார்ப்பதற்கு வேற லுக்கில் ஹேண்ட்ஸ்மாக படுஜோராக இருக்கிறார். இதில் நடிகை மஞ்சுவாரியரும் கலந்து கொண்டிருக்கிறார். அத்துடன் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார். மேலும் இதற்கு வில்லனாக ராணா டகுபதி கமிட் ஆகி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சர்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகை துஷாரா விஜயன், இறுதிச்சுற்று படத்தில் நடித்த ரித்திகா சிங் மற்றும் பகத் பாசில் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள். மேலும் ரஜினியின் நீண்ட நாள் நண்பராக இருந்து வரும் அமிதாப் பச்சன் 32 வருடங்களுக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் கைகோர்க்க இருக்கிறார்.

Also read: ரஜினியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த பிக் B.. சூப்பர் ஸ்டார் ரீமேக் செய்த அமிதாப்பச்சனின் 11 படங்கள்

மேலும் இப்படத்தின் பூஜையை திருவனந்தபுரத்தில் வைத்ததால் நேற்று ரஜினி கொச்சிக்கு சென்றிருக்கிறார். அங்கே ரஜினியை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் பார்த்ததும் தலைவர் 170 படத்தை பற்றி கேட்டிருக்கிறார்கள். அதற்கு ரஜினி இப்படம் முழுக்க முழுக்க சமூக சார்ந்த கருத்துக்களை எடுத்து வைக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

சும்மாவே ரஜினி படம் அனல் பறக்கும் இதுல சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சம்பந்தமாக நடிக்கிறார் என்றால் ரசிகர்களுக்கு இதுதான் மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். அத்துடன் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் ரசிகர்களிடம் அதிகரித்ததால் அடுத்தடுத்து அப்டேட்டுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தலைவர் 170 பட பூஜையின் புகைப்படங்கள்

thalaivar-170-pooja
thalaivar-170-pooja
thalaivar-170-pooja-2
thalaivar-170-pooja-2

Also read: அஜித்தின் விடாமுயற்சி புதிய கெட்டப் இணையத்தில் வைரல்.. கொல மாஸாக இருக்கும் AK, ரஜினி

- Advertisement -

Trending News