டபுள் மடங்கு சம்பளம், டபுள் ஓகே சொன்ன குணசேகரன்.. நாங்க என்ன தக்காளி தொக்கா, நெருக்கடியில் சன் டிவி

New Adhi Gunasekaran Salary: எப்பொழுதுமே ஒரு விஷயம் பெருசா ஆக போச்சு என்றால் அதற்கு உடனே கரும்புள்ளியாக கண் திருஷ்டி வந்துவிடும். அதேபோல தான் சீரியலில் சிம்ம சொப்பனமாக ஜொலித்துக் கொண்டிருந்தது எதிர்நீச்சல். அதற்கு முக்கிய காரணம் குணசேகரனின் கதாபாத்திரத்தை மக்கள் அதிக அளவில் ரசித்துப் பார்த்ததினால்.

அப்படிப்பட்ட குணசேகரன் கேரக்டரில் நடித்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக மாரடைப்பால் இறந்து போனார். இந்த ஒரு விஷயம் எல்லாத்துக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், இந்த நாடகத்தை இனி பார்ப்பதற்கு சுவாரஸ்யம் இல்லை என்று ஒவ்வொருவரும் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்தார்கள்.

Also read: தம்பிகளின் உயிரைக் காப்பாற்ற சிங்கம் போல் களம் இறங்கிய ஆதி குணசேகரன்.. ஜெயிலர் பிஜிஎம் வேற, ஸ்கிரீன் கிழியுது

இதனால் டிஆர்பி ரேட்டிங்கில் எப்போதுமே முதலிடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் கொஞ்சம் ஜர்க்காக ஆரம்பித்தது. இதற்கு சன் டிவி நிறுவனம் உடனடியாக ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று இந்த கேரக்டருக்கு பொருத்தமான ஆளை தேர்ந்தெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கினார்கள். அந்த வகையில் பல படங்களில் வில்லனாக நடித்து வந்த வேல ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.

ஆனால் அவரோ சரியான பதிலை சொல்லாமல் இழுத்தடித்ததால், அவர் வாயை அடைப்பதற்காக இதுவரை குணசேகரன் கேரக்டருக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தோமோ அதைவிட டபுள் மடங்கு உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சன் டிவி நிறுவனம் கூறிவிட்டது. உடனே டபுள் மடங்கு சம்பளம்னா எனக்கு ஓகே என்று வேலராமமூர்த்தி அவருடைய சம்மதத்தை கொடுத்து நடிக்க வந்து விட்டார்.

Also read: குணசேகரன் இல்லாததால் தம்பிகளை சீண்டிப் பார்க்கும் மருமகள்கள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்

அந்த வகையில் அவருடைய ஒருநாள் சம்பளம் 50,000 ரூபாய். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பிரச்சினை தற்போது முளைத்து விட்டது. அதாவது இந்த நாடகத்தில் நடிக்கும் மற்ற சீனியர் நடிகர்கள் இப்ப வந்த அவருக்கு இவ்வளவு சம்பளமா? அப்ப நாங்க எல்லாம் என்ன சும்மாவா என்று சன் டிவிக்கு கொஞ்சம் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

இதை எப்படிடா சமாளிக்க என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, மறுபக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் நிகழ்ச்சியால் ரொம்பவே கெதி கலங்கி போய்விட்டது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை அனைவரும் தினமும் ரசித்து பார்ப்பார்கள். அந்த வகையில் 9.30மணிக்கு ஒளிபரப்பாகினால் டிஆர்பி ரேட்டிங் அடிபட்டு விடும். அந்த காரணத்திற்காக 9 மணிக்கு மாற்றி அமைத்திருக்கிறார்கள். இப்படி எதிர்நீச்சல் சீரியலுக்கு தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சினையாய் கிளம்பி கொண்டே வருகிறது.

Also read: அட்ராசக்க! புது குணசேகரன் வந்தது ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்.. பிக் பாஸ் காட்டிய பயத்தால் சன் டிவி எடுத்த முடிவு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்