திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

குடும்ப மானத்தை கூறு போட்டு விற்கும் மருமகள்கள்.. வீட்டுக்குள்ள சேர்த்ததே தப்பு என நினைக்கும் மூர்த்தி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் மூர்த்தி வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து கண்ணன் ஜெயிலுக்கு வரை சென்று வந்திருக்கிறார்.

ஆனாலும் உடன் பிறந்தவன் ஆச்சே என கண்ணனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மீண்டும் வீட்டுக்குள் சேர்த்து இருக்கிறார்கள். மேலும் தப்பை உணர்ந்து கண்ணன் தன்னை திருத்திக் கொள்ள முயற்சி செய்து வருகிறார். ஆனால் ஐஸ்வர்யா நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்பது போல மீண்டும் யூடியூப் மோகத்தில் திரிகிறார்.

Also Read: விஜய் டிவி 8 சீரியல் நடிகைகளின் சம்பளத்தை கேட்டா தல சுத்துது.. முதலிடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்

அதாவது வீட்டில் போனை வைத்துக் கொண்டு வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இதை பார்த்தவுடன் மூர்த்தி கடும் கோபத்திற்கு உள்ளாகிறார். அதோடு மட்டுமல்லாமல் தனம் மற்றும் முல்லை இடம் இதுகுறித்து மூர்த்தி பேசுகிறார். அதாவது குடும்ப மானத்தையே கூறு போட்டு விற்கும் அளவிற்கு ஐஸ்வர்யா செய்து கொண்டிருக்கிறார்.

திரும்பவும் வீட்டுக்குள் போன் எடுத்து வீடியோ எடுத்தால் அவ்வளவு தான் என்று காட்டமாக பேசுகிறார். அந்த சமயத்தில் கண்ணன் உள்ளே வர முல்லை மற்றும் தனம் இருவரும் ஐஸ்வர்யாவிடம் இதைப் பற்றி சொல்லிவை என கண்டிக்கிறார்கள். இனி இதுபோன்று நடக்காது நான் பார்த்துக் கொள்கிறேன் என கண்ணன் கூறுகிறார்.

Also Read: லாரன்ஸ் படத்துல வாய்ப்பு வேணும்னா கிஸ் அடிச்சு காமி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடந்த கொடுமை

ஆனால் அங்கு ஐஸ்வர்யா யூடியூபில் லைவ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்து பயந்து போன கண்ணன் உடனடியாக அதை ஆப் செய்யுமாறு கூறுகிறார். மேலும் இனிமே போனில் இதுபோன்று வீடியோ எடுக்காதே என ஐஸ்வர்யாவிடம் கூறியிருக்கிறார். ஆனாலும் அதை அவர் கேட்ட பாடு இல்லை.

மறுபுறம் தனத்திற்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்பதற்காக மருமகள்கள் எல்லோரும் ஒரு திட்டம் போட்டு இருக்கிறார்கள். முல்லையின் பரீட்சைக்காக திருச்சி செல்ல வேண்டும் என்று அனுமதி வாங்க முற்படுகிறார்கள். தனம், மீனா ஆகியோரும் அவருடன் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுக்கும் போது எல்லோரும் யோசிக்க தொடங்குகிறார்கள். ஆகையால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தெரியாமல் தனத்திற்கு எப்படி ஆபரேஷன் நடக்கும் என்ற சுவாரஸ்யமான கதைகளத்துடன் இத்தொடர் சென்று கொண்டிருக்கிறது.

Also Read: என்னப்பா தனத்துக்கு நடிக்க தெரியலையா.. ரணகளத்திலும் கிளுகிளுப்புடன் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

- Advertisement -

Trending News