ஆணவத்தால் ஆடும் ஐஸ்வர்யா.. கண்ணன் எடுக்க போகும் முடிவு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் யாரும் எதிர்பார்க்காத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் பேச்சுக்கு மறு பேச்சு பேசாத ஜீவா இப்போது மூர்த்தியை எதிர்த்து சரமாரியான கேள்விகளால் கதி கலங்க வைத்தார். மேலும் இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டுக்கு ஜீவா, மீனா வரமாட்டோம் என்பதையும் உறுதியாக கூறிவிட்டனர்.

இந்த பிரச்சனை முடியாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அடுத்தடுத்த பிளவு ஏற்படுகிறது. அதாவது வீட்டுக்கு வந்த தனம் கண்ணன் தான் இதற்கெல்லாம் காரணம் என கண்டிக்கிறார். அப்போது பொறுக்க முடியாத ஐஸ்வர்யா எல்லோரையும் எடுத்தெறிந்து பேசுகிறார்.

Also Read : டிஆர்பி-யில் அடித்து நொறுக்கிய டாப் 10 சீரியல்கள்.. விஜய் டிவியை ஓரம் கட்டி வரும் ஜீ தமிழ்

அப்போது முல்லை குறுக்கே சென்று கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் எல்லா உண்மையும் சொல்லுகிறீர்களா, கண்ணனுக்கு சம்பளம் 40,000 என உண்மையை போட்டு உடைக்கிறார். இதனால் பிரச்சனை பெரிதாகிக் கொண்டு போக ஐஸ்வர்யா ஏட்டுக்கு போட்டியாக பேசி வீட்டை விட்டு கிளம்புகிறார்.

மேலும் தன்னுடன் கண்ணனையும் கூட்டிச் செல்ல வேண்டும் என்பதில் முனைப்புடன் கிளம்புகிறார். அப்போது கண்ணன் ஐஸ்வர்யாவை தடுக்க முயற்சி செய்யும்போது உனக்கு நான் முக்கியமா இல்ல இந்த குடும்பம் முக்கியமா என அதிரடியான கேள்வியை ஐஸ்வர்யா கேட்கிறார். இதனால் கண்ணன் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைகிறார்.

Also Read : விஷாலால் திருமணத்தை வெறுத்த வரலட்சுமி.. விஜய் டிவி பிரபலம் மீது வந்த திடீர் காதல்

ஏனென்றால் இத்தனை வருஷம் படிக்க வைத்த ஆளாக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸை விட்டு செல்வதா, இல்லை காதலித்து கரம் பிடித்த ஐஸ்வர்யாவை விடுவதா என குழப்பத்தில் உள்ளார். கடைசியில் கண்ணனும் சுயநலமாக ஐஸ்வர்யா பின்னால் தான் செல்ல இருக்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சுக்கு நூறாக உடைந்துள்ளது.

இதை நினைத்து மூர்த்தி மிகுந்த மன கஷ்டத்தில் மூழ்கிறார். மேலும் பிரிந்து கிடைக்கும் இந்த குடும்பத்தை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என கதிர் முயற்சி எடுக்க உள்ளார். இவ்வாறு பல அதிரடி திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் வரும் வாரங்களில் ஒளிபரப்பாக இருக்கிறது.

Also Read : தொகுப்பாளிகளில் கில்லாடியாக ஜெயித்துக் காட்டிய 6 பேர்.. விஜய் டிவியை மொத்தமாக குத்தகை எடுத்த பிரியங்கா!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்