புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கதிர் வீட்டிற்கு வந்தும் அட்டகாசம் பண்ணும் ஐஸ்வர்யா.. நடுத்தெருவில் நின்னும் திருந்தவில்லை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரொம்ப நாளாகவே கதையே இல்லாமல் எபிசோடை 2000 வரை இழுக்க வேண்டும் என்று முனைப்புடன் கதை நகர்ந்து வருகிறது. என்னமோ கண்ணன் கவர்மெண்ட் சம்பளம் வாங்குற மெதப்புல தனியாக கண்ணனை கூப்பிட்டு போன ஐஸ்வர்யா நிலைமை உனக்கு இது தேவை தான் என்று சொல்லும் அளவிற்கு கடனாளியாக இருக்கிறார்.

பிறகு என்னதான் கோபம் இருந்தாலும் நம் கண் முன்னாடியே தம்பி கஷ்டப்படுகிறான் என்று கவலைப்பட்டு கதிர் இவர்களை வீட்டிற்கு கூட்டிட்டு வந்தார். இந்த விஷயம் மூர்த்திக்கு தெரிந்தால் கண்டிப்பாக வெளியே அனுப்பிவிடுவார். அதன் பின் ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவில் இருந்து கஷ்டப்படுவார்கள் என்று எதிர்பார்த்தால் தனம் பேசிப் பேசியே மூர்த்தியை சமாதானம் பண்ணி விட்டார்.

Also read: பாசமழையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

சரி இதற்குப் பிறகாவது ஐஸ்வர்யா ஒழுங்காக திருந்தி குடும்பத்துடன் ஒற்றுமையாக சந்தோசத்துடன் இருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் என்னைக்குமே நான் திருந்த மாட்டேன் நான் இப்படித்தான் என்று மூர்த்தி வீட்டிற்கு போயும் அட்டகாசம் செய்து வருகிறார். அதாவது மூர்த்தி, தனத்திடம் சொன்ன விஷயம் வீட்டில் இருக்கட்டும் அனல் இந்த ஃபோனை வைத்து வீட்டில் இருக்கிற விஷயத்தை காட்டி வீடியோ எடுக்குற வேலையை நிப்பாட்ட சொல்லிரு என்று சொல்லி இருக்கிறார்.

தனமும் சரி மாமா என்று சொல்லி கண்ணனிடம் கண்டிஷன் ஆக இந்த மாதிரி வேலையை இங்கே வைத்து பண்ணக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இதை ஐஸ்வர்யாவிடம் சொல்ல தெம்பு இல்லாத கண்ணன் அப்படியே விட்டு விடுகிறார். அடுத்து ஐஸ்வர்யா வழக்கம்போல் இதுதான் எங்க வீட்டு பாத்ரூம், இங்கதான் நாங்க பாத்திரம் விளக்குவோம் என்று அப்பட்டமாக வீடியோவில் சொல்கிறார்.

Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

அப்பொழுது அங்கே வந்த மூர்த்தி பாத்ரூம் போகும்போது அதையும் வெட்கமே இல்லாமல் ஐஸ்வர்யா இதுதான் எங்க மூர்த்தி மாமா எங்க போறாரு தெரியுமா பாத்ரூம் போறாரு என்று வீடியோவில் சொல்கிறார். இதை பார்த்து கடுப்பான நம்ம மூர்த்தி உள்ள போய் தனத்திடம் சொல்கிறார்.

ஐஸ்வர்யா கண்ணன் நடுத்தெருவுக்கு வந்தும் திருந்தாமல் கதிர் வீட்டிலும் இவருடைய அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டார்கள். பாவம் இவர்களுக்கு இடையே தனம் கதிர் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார்கள். இவர்கள் எல்லாம் அப்படியே நடுத்தெருவிலேயே விட்டுவிட்டு இருக்கணும் அப்பொழுது தான் திருந்துவார்கள்.

Also read: கதிரை கதற கதற வச்சு செய்த நந்தினி.. ஜீவானந்தம் மாஸ் என்ட்ரியால் குணசேகரனுக்கு ஆப்பு

- Advertisement -

Trending News