வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

காணாமல் போகும் ஆதி குணசேகரன்.. மாரிமுத்து இல்லாததால் தத்தளிக்கும் எதிர்நீச்சல் ஜீவானந்தம்

Ethirneechal: எத்தனை சீரியல் வந்தாலும் எங்களை ஒன்னும் பண்ண முடியாதுன்னு கெத்து காட்டி வந்த எதிர்நீச்சல் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு தத்தளித்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருடைய மரணம் ஒட்டுமொத்த மீடியாவையும் உலுக்கி எடுத்தது.

அது மட்டுமல்லாமல் யார் அந்த கதாபாத்திரத்தை ஏற்பார் என்ற விவாதமும் எழுந்தது. இது ஒரு புறம் இருக்க சீரியலில் மாரிமுத்து கடைசியாக நடித்த காட்சிகள் சிறிது சிறிதாக காட்டப்பட்டு வந்தது. அதன் பிறகு என்ன நடக்கும் என்று பலரும் யோசித்த நிலையில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகி உள்ளது.

Also read: ஜெயிலுக்குப் போகும் ஜீவா கதிர்.. பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்-க்கு எண்டு கார்டே இல்ல

அதில் அடுத்தடுத்து குடும்பத்தில் நடக்கும் பிரச்சனையை தாங்க முடியாமல் ஆதி குணசேகரன் லெட்டர் எழுதி வைத்துவிட்டு எங்கோ செல்வது போன்று காட்டப்பட்டுள்ளது. இதனால் ஒட்டு மொத்த எதிர்நீச்சல் குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கின்றனர். இந்த ப்ரோமோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

எந்த பிரச்சனை நடந்தாலும் சிங்கம் போல் எதிர்த்து நிற்கும் ஆதி குணசேகரன் இப்படி வீட்டை விட்டு செல்பவர் கிடையாது. ஆனால் வேறு வழி இல்லாமல் கதை இப்படி ஒரு பாதையை நோக்கி செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்று ரசிகர்கள் உருக்கத்துடன் இந்த வீடியோவை பார்த்து கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

Also read: மொத்த குடும்பத்திடமும் அசிங்கப்பட போகும் கோபி.. தலை தப்பிய பாக்யா

மேலும் அடுத்த ஆதி குணசேகரன் யார் என்ற தேடல் இருந்து வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் அதற்கான விடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதனாலேயே இயக்குனர் இப்படி ஒரு ட்விஸ்ட் வைத்து சீரியலை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் புது குணசேகரன் பற்றிய எதிர்பார்ப்பு இருந்தாலும் அவருக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆக மொத்தம் மாரிமுத்துவின் இழப்பு தற்போது சீரியலுக்கு மட்டுமல்லாமல் டிஆர்பிக்கும் தடுமாற்றத்தை கொடுத்துள்ளது.

Also read: ஜீவானந்தத்தை அப்பாவாக கூப்பிட ஆசைப்படும் குணசேகரனின் வாரிசுகள்.. உச்சகட்ட கோபத்திற்கு போன ஈஸ்வரி

- Advertisement -

Trending News