400 எபிசோடு முடிந்த நிலையில் சன் டிவி சீரியல் நடிகை மாற்றம்.. என்ட்ரி கொடுக்கப் போகும் விஜய் டிவியின் வேதா

Sun Tv Serial Actress Changed: எத்தனையோ சேனல்கள் போட்டி போட்டு வந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சேனலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. அதனால் காலையில் மாலையில் என மொத்தமாக 16 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலில் நடித்த அனைவரும் மக்களிடம் பிரபலமாகி விடுவார்கள்.

அதன்மூலம் வெள்ளித்திரைகளையும் மற்ற நிகழ்ச்சியிலும் பல வாய்ப்புகளை பெற்று அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி பயணிப்பார்கள். அதே மாதிரி தான் சன் டிவி சீரியலில் கிட்டத்தட்ட 400 எபிசோடு முடிந்த ஒரு சீரியல் நடிகைக்கு வெள்ளி திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதனால் இனி சீரியல் வேண்டாம் என்று முடிவு எடுத்திருக்கிறார்.

விஜய் டிவியின் வேதா

அந்த நடிகைக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மோதலும் காதலும் சீரியலில் நடித்த வேதா என்னும் அஸ்வதி என்பவர் நடிக்கப் போகிறார். இந்த நாடகம் முடிந்த நிலையில் இதை ஏன் முடிக்க வேண்டும். இந்த நாடகம் நல்லா தானே போய்க் கொண்டிருக்கிறது என்று பலரும் நல்ல விமர்சனங்கள் கொடுத்து வந்தார்கள்.

அந்த வகையில் வேதா சன் டிவி மூலம் என்டரி கொடுக்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு நல்ல வரவேற்பு இங்கேயும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி எந்த சீரியலில் நடிக்கும் நடிகை மாற்றப்படுகிறது என்றால் மலர் என்ற சீரியலில் நடித்து வரும் பீர்த்தி சர்மா. இவர் திருமணம் என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நுழைந்தார்.

அதன் பின் சித்தி 2 என்ற சீரியலை முக்கியமான நடிகையாக வெண்பா கேரக்டரில் நடித்து அனைவரிடமும் பிரபலமானார். இதனை அடுத்து மலர் சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். ஆரம்பத்தில் என்னமோ இந்த நாடகம் நன்றாக தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று கதாநாயகன் மாறிய நிலையில் போகப் போக கொஞ்சம் டல் அடித்து விட்டது.

அத்துடன் டைமிங் மாத்தி விட்டதால் நாடகத்திற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் பீர்த்தி சர்மா நாடகத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு வெள்ளி திரைக்கு புகுந்து விட்டார். மேலும் புதிதாக வரப்போகும் வேதா என்னும் அஸ்வதி மூலம் வித்தியாசமான கதைகளத்துடன் விறுவிறுப்பை கூட்டும் அளவிற்கு நாடகத்தில் பல திருப்புமுனைகள் ஏற்படப் போகிறது.

சன் டிவியில் டிஆர்பி ரேட்டிங்கில் இருக்கும் சீரியல்கள்

Next Story

- Advertisement -