ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடக்குமா இல்லையா? கருப்பு ஆடு குணசேகரன் சிக்குவாரா!

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் மற்றும் 40% சொத்து இதையே வச்சு கொஞ்ச நாளாகவே கதை நகர்ந்து வருகிறது. எப்பொழுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைத்து அந்த வீட்டு மருமகள்கள் குணசேகரனுக்கு எதிராக சுயமாக யோசித்து முடிவெடுப்பார்கள் என்பதை பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறது. ஆதிரையின் நிச்சயதார்த்தம் நடக்குமா இல்லையா என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

எதிரும் புதிருமாக இருந்த எஸ் கே ஆர் மற்றும் குணசேகரன் குடும்பம் தற்போது ஒன்றாக இணைந்து நிச்சயதார்த்தத்திற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ஒவ்வொரு மனதிற்குள்ளும் வெவ்வேறு திட்டங்களை வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிலும் குணசேகரன் போடும் திட்டம் எஸ் கே ஆர் தம்பி கூட திருமணம் ஆகவும் கூடாது, அதே நேரத்தில் 40% சொத்தையும் நம் அடைய வேண்டும் என்று கங்கணம் கட்டிட்டு அலைகிறார்.

Also read: குணசேகரனை மடக்கிய எஸ் கே ஆர் தம்பிகள்.. இவரை மிஞ்சும் அளவிற்கு பிளான் போட்ட அப்பத்தா

இன்னொரு பக்கம் இந்த நிச்சயதார்த்தத்தின் மூலம் குணசேகரனை பழிவாங்க நினைக்கும் எஸ் கே ஆர் தம்பிகள். அடுத்ததாக இந்த நிச்சயதார்தத்தை நிறுத்திவிட்டு கரிகாலனை கல்யாணம் பண்ண வைக்க வேண்டும் என்று துடிக்கும் ஜான்சி ராணி. மேலும் ஜனனி இதன்மூலம் குணசேகரனின் உண்மையான முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இதில் சிக்குவாரா என்பதுதான் தெரியவில்லை.

ஆனாலும் இந்த நிச்சயதார்த்தத்திற்கு வந்த வாசு எதற்குமே அஞ்சாமல் சாருபாலாவை மடக்கி மடக்கி கேள்வி கேட்டது உண்மையாகவே பார்க்க நன்றாக இருந்தது. இதனால் அனைவரின் வெறுப்பையும் சம்பாதித்து விட்டு இந்த ஃபங்க்ஷனில் இருந்து விரோதியாக போகிறார். ஜனனி குடும்பத்திலிருந்து வந்த ஒரே சொந்தம் அவரும் அவமானப்பட்டு வெளியே போகிறார்.

Also read: எஸ் கே ஆர் பொண்டாட்டினா வாயை பிளக்கும் குணசேகரன்.. மெண்டல் என லெப்ட் அண்ட் ரைட் வசை பாடிய எக்ஸ் லவ்வர்

பொதுவாகவே ஒரு குடும்பத்தில் நிகழ்ச்சி இருக்கிறது என்றால் அதில் கண்டிப்பாக ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடிக்கும் என்பது காலம் காலமாக நடக்கக்கூடிய ஒரு இயல்பான விஷயம். இப்படி இருக்கையில் இந்த குடும்பத்தை பற்றி சொல்லவா செய்யணும். ஆனாலும் இந்த ஆதிரை அருண் கல்யாண சீன் ரொம்பவே போர் அடிக்கிறது.

அடுத்ததாக இந்த நிச்சயதார்த்தத்தை தடுப்பதற்காக கரிகாலன் மற்றும் ஜான்சி ராணி மண்டபத்திற்கு வருகிறார்கள். அப்படி வந்தால் குணசேகரன் பற்றி எல்லா உண்மைகளையும் புட்டு புட்டு வைக்கும் போது அதை சமாளிப்பதற்கு எதையாவது ஒரு பிளான் போட்டு நிச்சயதார்த்தத்தை நடத்துவாரா. இல்லை இவருடைய பிளான் தெரிந்து கொண்டு எஸ்கேஆர் குடும்பம் இந்த நிச்சயதார்த்தம் வேண்டாம் என்று நிறுத்துவார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: வழக்கம்போல் புலம்பித் தவிக்கும் கோபி.. பாக்யாவை படாத பாடு படுத்தும் ராதிகா

- Advertisement -

Trending News