சினிமாவிலும் அரசியலிலும் கலக்கிய ரோஜாவின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு.. அரண்மனை போல் இருக்கும் பிரம்மாண்ட வீடு

Actress Roja Net Worth: 90களில் கருப்பழகியாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர்கள் நடிகை ரோஜா, தமிழில் மட்டுமல்ல தென்னிந்திய படங்களில் நடித்து பேமஸ் ஆனவர். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டினார்.

கடந்த 1999ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 10 வருடத்திற்கு பிறகு அந்த கட்சியை விட்டு விலகி, ஓய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தற்போது எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ரோஜா, ஆந்திராவில் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

ரோஜாவின் முதல் படமான செம்பருத்தி படத்தில் நடித்த போதே அந்த படத்தின் இயக்குனர் ஆர்.கே. செல்வமணிக்கும் அவருக்கும் காதல் பத்திக்கிச்சு. இதை அடுத்து ரோஜாவை வைத்து ஆர்கே செல்வமணி ஒரு சில படங்களை இயக்கி, அதன்பின் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

Also read: ரோஜாவின் கணவர் மீது அதிரடியாக பிடிவாரண்ட் போட்ட நீதிபதி.. 7 வருடமாக செவி சாய்க்காததால் வந்த விளைவு

நடிகை ரோஜாவின் சொத்து விபரம்

மேலும் சினிமாவிலும் அரசியலிலும் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் ரோஜா தனது 50-வது பிறந்த நாளை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள், ரசிகர்களுடன் சமீபத்தில் கோலாகலமாக கொண்டாடினார். இந்த நிலையில் அவரைக் குறித்த செய்திகளும், ரோஜாவின் ஒட்டுமொத்த சொத்து விபரமும் வெளியாகி பலரையும் வியக்க வைத்திருக்கிறது.

இவருக்கு மொத்தமாக 80 கோடி சொத்துக்கள் உள்ளது. அதிலும் ஹைதராபாத் மற்றும் சென்னையில் அரண்மனை போல் வீடு உள்ளது. ரோஜா தனது பிறந்தநாள் அன்று ஹோம் டூர் வீடியோவை போட்டு பலரையும் வாயடைக்க வைத்தார். அது மட்டுமல்ல இவரிடம் ஆடம்பரமான சொகுசு கார்களும் உள்ளது.

Also read: சன்னி லியோனின் நடத்தையை விமர்சித்த ரோஜா.. தக்க பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த சம்பவம்