ரோஜாவின் கணவர் மீது அதிரடியாக பிடிவாரண்ட் போட்ட நீதிபதி.. 7 வருடமாக செவி சாய்க்காததால் வந்த விளைவு

Actress Roja Husband: சினிமாவிலும் அரசியலிலும் பிஸியாக இருந்து கொண்டிருக்கும் நடிகை ரோஜா, தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராகவும் சுற்றுலாத்துறை அமைச்சராகவும் உள்ளார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நிறைய படங்கள் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் ரோஜாவின் காதல் கணவருமான இயக்குனர் ஆர்.கே. செல்வமணி மீது நீதிமன்றம் அதிரடியாக பிடிவாரண்ட் போட்டு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவதூறு வழக்கில் ஆஜராகாத காரணத்திற்காக இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கு பிடிவாரண்ட் போடப்பட்டுள்ளது.

Also Read: பிரம்மாண்ட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய கேடி.குஞ்சு மோகனின் 5 படங்கள்.. இப்ப வர பிரபுதேவா உருட்டும் ஒரே படம்

தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்த செல்வமணி கடந்த 2016 ஆம் ஆண்டு அளித்த பேட்டியில் பைனான்சியர் முகுந்த்ரா சந்து போரா குறித்து அவதூறான கருத்துக்களை கூறியிருக்கிறார். இதனால் அவர் மீது முகுந்த்ரா சந்து போரா வழக்கு தொடுத்தார். ஆனால் பைனான்சியர் முகுந்த்ரா சந்து மறைந்த பின் அவரது மகன் இந்த வழக்கை நடத்தி வந்தார்

இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் இந்த வழக்கின் சார்பாக செல்வமணி தரப்பில் அவரோ, அவரது சார்பில் வேறு எந்த வழக்கு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. இதனால் செல்வமணிக்கு ஜாமினில் வெளி வராத அளவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து அதிரடியான உத்தரவை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Also Read: டெலிட் ஆன பாடல்களை ஓவர் நைட்டில் மிரட்டிவிட்ட ஏ ஆர் ரகுமான்.. லாஜிக் ஓட மேஜிக்காய் மாறிய சம்பவம்

மேலும் அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். அன்று மட்டும் செல்வமணி ஆஜராகவில்லை என்றால் நிச்சயம் கைது செய்யப்படுவார். ஏனென்றால் கடந்த ஏழு வருடங்களாக இதே போன்று தான் எந்த வாய்தாவிற்கும் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அந்த பினான்சியரின் மகன் மட்டும் நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலையோ அலையாய் அலைந்து திரிகிறார்.மேலும் செல்வமணி ஏழு வருடங்களாக இந்த அவதூறு வழக்கிற்கு செவி சாய்க்காததால் தான் இப்படி ஒரு விளைவை சந்தித்துள்ளார் என்றும் சோசியல் மீடியாவில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.

Also Read: சன்னி லியோனின் நடத்தையை விமர்சித்த ரோஜா.. தக்க பதிலடி கொடுத்து மூக்கை உடைத்த சம்பவம்

Next Story

- Advertisement -