திருமணத்திற்கு பிறகு மாஸ்டர் பிளான் போட்ட நயன்.. தூது புறாவாக செயல்பட்ட விக்னேஷ் சிவன்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இப்போது ஜவான் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜவான் அட்லீ இயக்கும் படமாகும். இந்த படத்தில் ஹீரோவாக பாலிவூட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கிறார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தை கௌரிகான் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

நயன்தாரா இப்போது தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை. எல்லா நடிகைகளை விடவும் நயன்தாராவுக்கு தான் சம்பளம் அதிகம். சமீபத்தில் நயன்தாராவுக்கும் அவருடைய ஆறு வருட காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து தேனிலவு சென்று திரும்பி வந்த கையோடு ஜவான் சூட்டிங்கில் கலந்து கொண்டார்.

Also Read: 3 மாதத்தில் 50 கோடிக்கு பிளான் போட்ட நயன்தாரா.. அட்வான்ஸ் மட்டுமே பல கோடிகள் வந்திருக்கிறதாம்!

விக்னேஷ் சிவனின் லேட்டஸ்ட் படமான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு பிறகு அஜித்தின் 62 வது படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகின. பின்பு விக்னேஷ் சிவனும் இதை உறுதிப்படுத்தினார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

H. வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து, போனி கபூர் இயக்கும் திரைப்படத்தின் சூட்டிங் முடிந்த பிறகு விக்னேஷ் படத்தில் அஜித் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரிடப்படாத இந்த படம் AK 62 என அடையாளபடுத்தப்படுகிறது. அனிருத் இசையமைக்கிறார்.

Also Read:சிம்பு நயன்தாரா பற்றிய ரகசியத்தை உளறிய இயக்குனர்.. பட புரமோஷனுக்காக போட்டுக்கொடுத்த பரிதாபம்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்க இருக்கும் இந்த படத்தில் தான் நயன்தாரா தன்னுடைய புதிய மாஸ்டர் பிளானை ஸ்டார்ட் பண்ணி இருக்கிறார். அதாவது இதுவரை மொத்தமாக கால்சீட் கொடுத்து சம்பளத்தை உறுதிப்படுத்தும் நயன்தாரா, இந்த படத்திலிருந்து ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் என பிக்ஸ் செய்து இருக்கிறாராம்.

இதனால் நயன்தாராவின் சம்பளம் பத்து கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த படத்திற்கு மொத்தமாக 20 நாட்கள் ஒதுக்கி கொடுத்து இருக்கிறார். எப்படியும் சொன்ன நாட்களுக்குள் படத்தை முடிக்க முடியாது, எனவே நாள் அதிகமாக சம்பளமும் அதிகமாகும் என்ற ஷார்ப்பான பிளானை போட்டுவிட்டார்.

Also Read: ஒன்றாக வசித்து வந்தபோது பிரபுதேவா சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இதனால்தான் நயன்தாரா பிரிந்து சென்றாராம்!

Next Story

- Advertisement -