fbpx
Connect with us

Cinemapettai

ஒன்றாக வசித்து வந்தபோது பிரபுதேவா சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இதனால்தான் நயன்தாரா பிரிந்து சென்றாராம்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஒன்றாக வசித்து வந்தபோது பிரபுதேவா சொன்ன அந்த ஒத்த வார்த்தை.. இதனால்தான் நயன்தாரா பிரிந்து சென்றாராம்!

நயன்தாரா(Nayanthara)வை பற்றிய சர்ச்சைகள் என்னதான் அவர் பெரிய நடிகையாக வளர்ந்தாலும் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் ஏதோ ஒன்று புதிது புதிதாக வந்து கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் அவருடைய பழைய விஷயங்களை கிளறி எடுப்பதில் அனைவருக்கும் அப்படி ஒரு சந்தோஷம். அப்படி ஒரு விஷயம் தான் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிம்புவை பிரிந்த பிறகு நயன்தாரா பிரபுதேவாவை காதலித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். சிம்புவை விட பிரபுதேவாவை அதிகமாக காதலித்தார் என்பதுதான் அதில் ஒரு உண்மையான விஷயம்.

பிரபுதேவாவுக்காக சினிமாவை விட்டு விலகி மதம் மாறி திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு சென்றார். கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகள் இருவரும் ஒரே வீட்டில் தான் வசித்து வந்தார்கள்.

திருமணத்திற்கு தயார் செய்த பிறகு நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் இடையே ஏதோ ஒரு பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது பிரபுதேவா ஹிந்தியில் பிரபலமாகத் தொடங்கிய காலகட்டம்.

அந்த நேரத்தில் பிரபுதேவா நயன்தாராவிடம் சிம்புவுடன் ஏற்பட்ட பிரச்சனையை கேட்டு நயன்தாராவை நோகடித்ததாக தெரிகிறது. காதலிக்கும்போது சிம்புவை பற்றி கவலைப்படாத பிரபுதேவா, கல்யாணம் செய்யும் போது சிம்புவுடன் நடந்ததை எல்லாம் கேட்டது அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உடனடியாக அடுத்த கணமே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டாராம் நயன்தாரா. அப்போது பிரபுதேவாவை ஒதுக்கிய நயன்தாரா, தற்போது வரை எந்த ஒரு பேச்சு வார்த்தையும் கிடையாது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Continue Reading
To Top