பொது இடத்தில் தேவையில்லாத விஷயங்களை செய்து சர்ச்சையை கிளப்புவதில் கில்லாடியாக இருப்பவர் இந்த நடிகை. பாலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக வலம் வரும் இவர் எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருந்து விடுவார்.
பாலிவுட் நடிகையாக இருந்தாலும் தமிழில் ஒரு சில பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும் இவர் சமீபத்தில் ஹிந்தியில் பிரபல ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். எப்போதும் அதிரடியான விஷயங்களை செய்து வரும் நடிகை சமீபத்தில் தன் கணவரை பிரிந்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.
ஆனால் நடிகை அதைப்பற்றி கவலைப்படாமல் தற்போது மீண்டும் ஒரு காதலரை பிடித்துள்ளார். இந்த காதல் ஜோடி தற்போது பொது இடங்களில் அதிகமாக சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒரு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தது ஊடகங்களில் பரபரப்பை கிளப்பியது.
இதனால் பத்திரிக்கையாளர்கள் அவரிடம் ஏதாவது நல்ல செய்தியா என்று கேட்டிருக்கின்றனர். அதை புரிந்து கொண்ட நடிகையும் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
மேலும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பம் தரித்தாலும் எனக்கு கவலை கிடையாது என்று கூறி பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளார் அந்த நடிகை. ஒருவேளை திருமணத்திற்கு முன்பே நான் கர்ப்பமானால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போது நடிகை குழந்தை குறித்து இவ்வளவு வெளிப்படையாக கூறியிருப்பது பாலிவுட்டில் சிறு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.