நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்கும் நடிகை.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இவங்க தான்

Actress Nayanthara: நயன்தாரா பல சர்ச்சைகளில் சிக்கினாலும் தனது திறமையால் இப்போதும் முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடம் நயன்தாராவுக்கு தான்.

அவர் ஒரு படத்திற்கு 10 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வருகிறார். இவருக்கு அடுத்த இடத்தில் சமந்தா இருந்தார். ஆனால் அவர் உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் அவரது மார்க்கெட்டும் இப்போது சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Also Read : அஜித்துடன் நடிக்க வந்த வாய்ப்புகளை தூக்கி எறிந்த நடிகை.. நயன்தாரா இடத்தை பிடிக்க இப்படி ஒரு தந்திரமா.!

இந்நிலையில் நயன்தாராவின் அடுத்த இடத்தை பிடிக்க ஒரு நடிகை போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதாவது கீர்த்தி சுரேஷ் தான் இப்போது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கிறார். அதுவும் தெலுங்கில் மகேஷ்பாபு உடன் சமீபத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

இந்தப் பாட்டு பட்டி தொட்டி எங்கும் பரவி வைரலானது. இப்போது ஒரு படத்திற்கு ஆறு கோடிக்கு அதிகமாக கீர்த்தி சுரேஷ் சம்பளம் வாங்குகிறார். மேலும் பட வாய்ப்பு அதிகமாகிக் கொண்டிருப்பதால் நயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்டு வருகிறார். அதுவும் தமிழை விட தெலுங்கில் தான் அவருக்கு பட வாய்ப்பு அதிகமாக குவிந்து வருகிறது.

Also Read : பில்லா கெட்டப்பில் 17 வருடம் கழித்து என்ட்ரி கொடுத்த நயன்தாரா.. ஒரே வீடியோவில் த்ரிஷா மார்க்கெட் காலி

ஆனாலும் சமீப காலமாக கீர்த்தி சுரேஷுக்கு பெரிய வெற்றி படங்கள் எதுவும் இல்லை என்றாலும் பட வாய்ப்பு குவிந்து வருகிறது. இதற்கு காரணம் நயன்தாரா மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதேபோல் சமந்தாவுக்கும் இப்போது பட வாய்ப்புகள் இல்லை. ஆகையால் திரிஷா தான் இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் விருப்பமான நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். மேலும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது போட்டோ சூட் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Also Read : அம்மன் அவதாரம் எடுக்க இருந்த வாரிசு நடிகை.. தட்டிப் பறித்த நயன்தாரா

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்