அஜித்துடன் நடிக்க வந்த வாய்ப்புகளை தூக்கி எறிந்த நடிகை.. நயன்தாரா இடத்தை பிடிக்க இப்படி ஒரு தந்திரமா.!

Actor Ajith: கோலிவுட்டின் உச்ச நடிகராக இருக்கும் அஜித் படத்திற்கு வந்த வாய்ப்பையே தூக்கி எறியும் அளவுக்கு தற்போது மவுசு நடிகைக்கு கூடி இருக்கிறது. இதனால்
அடுத்ததாக நயன்தாராவின் இடத்தை எப்படியாவது பிடித்தாக வேண்டும் என பக்காவாக பிளான் போட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் மீண்டும் உயர்ந்துள்ளது. பெரிய நடிகர்களின் முக்கிய படங்களில் திரிஷா தான் வரிசையாக கமிட் ஆகி வருகிறார். அதிலும் குறிப்பாக விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து வீடு தேடி வந்த அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தை உடனே ஓகே செய்தார்.

Also Read: அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்த அந்த கதை.. சூர்யா நடிப்பில் சூப்பர் ஹிட்டான சம்பவம்

ஆனால் விடாமுயற்சி பல மாதங்களாக ஆரம்பிக்கப்படாததால் திரிஷா காத்திருந்து கடுப்பாகி வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டார். தற்பொழுது விடாமுயற்சி பட குழு அனைத்து வேலைகளையும் முடித்து விட்டது. படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் திரிஷாவை நடிக்க கூப்பிட்டு இருக்கிறார்கள்.

ஆனால் திரிஷா வேறு நிறுவனத்திற்கு வாய்ப்பை கொடுத்து விட்டார். இதனால் படக்குழு வேற ஹீரோயினை தேட முடிவு செய்தது. இதனால் வந்த வாய்ப்பை விடக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட வாய்ப்புகளை தூக்கி எறிந்து விட்டார் திரிஷா.

Also Read: விடாமுயற்சியால் பிடித்த ஏழரை சனி.. நம்பிய இயக்குனரும் அஜித்தை கைவிட்ட பரிதாபம்

இப்போது அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சியில் கண்டிப்பாக திரிஷா நடிக்கிறார் என்று உறுதியாகி உள்ளது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித்- திரிஷா ஜோடி மறுபடியும் எட்டு வருடங்கள் கழித்து விடாமுயற்சி படத்தில் இணைந்துள்ளது. இவ்வாறு திரிஷா தொடர்ந்து விஜய், அஜித் இருவருடன் ஜோடி சேர்ந்தவர் தான் மீண்டும் ஒரு ரவுண்டு வரமுடியும் என்று புரிந்து கொண்டுள்ளார்.

அது மட்டுமல்ல லேடி சூப்பர் ஸ்டார் ஆக தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் நயன்தாரா இல்லாததை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் ஒரே நடிகை திரிஷா மட்டுமே. இதற்காக மிகவும் தந்திரத்துடனே ஒவ்வொரு செயல்களையும் செய்து வருகிறார்.

Also Read: கேஜிஎஃப் இயக்குனரை கூப்பிட்ட அஜித்.. அப்ப கண்டிப்பா இவங்க ரெண்டு பேரும் சேர போவது உறுதி.!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்