அம்மன் அவதாரம் எடுக்க இருந்த வாரிசு நடிகை.. தட்டிப் பறித்த நயன்தாரா

Actress Nayanthara: அம்மன் கேரக்டர் என்றாலே ரம்யா கிருஷ்ணன் தான் என்று சொல்லும் அளவுக்கு அவர் ஏராளமான சாமி படங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ரோஜா, பானுப்ரியா போன்ற பல நடிகைகளும் அம்மன் அவதாரம் எடுத்திருக்கின்றனர். அந்த வகையில் வாரிசு நடிகை ஒருவரும் அம்மன் வேடத்தில் நடிக்க இருந்தார்.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அந்த வாய்ப்பு நயன்தாராவுக்கு சென்று இருக்கிறது. அதாவது ஆர் ஜே பாலாஜி, என் ஜே சரவணன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் மூக்குத்தி அம்மன். ஆர் ஜே பாலாஜி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்திருப்பார்.

Also read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

ஆரம்பத்தில் இவர் எப்படி இந்த கேரக்டருக்கு பொருந்தி போவார் என்று பேசப்பட்டாலும் படம் வெளிவந்த பிறகு ஏற்றுக்கொள்ளும் படியாகவே இருந்தது. ஆனால் முதலில் இந்த கேரக்டரில் நடிக்க இருந்தது ஸ்ருதிஹாசன் தான். ஆர் ஜே பாலாஜி இப்படம் ஆரம்பிக்கப்படும் போது பல ஹீரோயின்களிடம் கதையை சொல்லி இருக்கிறார்.

அதில் ஸ்ருதிஹாசனையும் சந்தித்து இந்த அம்மன் கேரக்டரில் நடிக்கும்படியாக அவர் கேட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறை நயன்தாரா ஆர் ஜே பாலாஜியை பார்க்கும்போது என்னிடமெல்லாம் கதையை சொல்ல மாட்டாயா என்று கேட்டாராம். அதன் பிறகு கதையைக் கேட்டு பிடித்துப் போனதால் நயன்தாரா இதில் நடித்திருக்கிறார்.

Also read: கல்யாணத்துக்கு பின் ராசி இல்லாமல் போச்சு.. முதலிடத்தை பிடிக்க துடிக்கும் நயன்தாராவின் 75வது படம்

இப்படித்தான் மூக்குத்தி அம்மன் படம் உருவாகி இருக்கிறது. ஆனால் இதற்கு முதல் சாய்ஸ் ஆக இருந்தவர் ஸ்ருதிஹாசன் தான் என்ற செய்தி கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருக்கிறது. ஒரு வேளை அவர் மட்டும் நடித்திருந்தால் நிச்சயம் அம்மன் மாடர்ன் அவதாரமாக தான் இருந்திருப்பார்.

ஏற்கனவே மலர் டீச்சர் கேரக்டரில் தெலுங்கில் அவர் நடிக்க இருந்த போது பல கேலி கிண்டலுக்கு ஆளானார். நல்ல வேளையாக இதில் அவர் அம்மனாக நடிக்கவில்லை. இல்லை என்றால் மொத்தமாக கழுவி ஊற்றப்பட்டு இருப்பார். அந்த வகையில் நயன்தாராவால் இப்படி ஒரு நல்லது நடந்திருக்கிறது.

Also read: விக்னேஷ் சிவனால் பறிபோன நிம்மதி.. நயன்தாராவை சுற்றும் சொத்து பிரச்சனை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்