ஆபத்தான ஆதி குணசேகரனாக வரும் பெருமாள் நடிகர்.. விட்ட டிஆர்பி-யை பிடிக்கும் எதிர்நீச்சல்

Adhi Gunasekaran Replacement: கம்பீரமான குரலும், தத்ரூபமான நடிப்பையும் வாரி வழங்கி எதிர்நீச்சல் சீரியலுக்கு ஆணிவேராக இருந்த குணசேகரனின் கதாபாத்திரம் அனைவரிடமிருந்தும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இவர் ஒருவருக்காக தான் நாங்கள் இந்த நாடகத்தை தினமும் ரசித்துப் பார்த்து வருகிறோம் என்று அனைத்து குடும்பங்களிலும் இவருடைய கேரக்டரை வியந்து பார்த்து வந்தனர்.

அப்படிப்பட்ட இவருடைய இறப்பு அனைவரையும் வாட்டி வதைக்கிறது. இவருடைய கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகர் வந்தாலும் எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரசிகர்கள் புலம்பித் தவிக்கிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் நாடகத்தின் இயக்குனர் திருச்செல்வம் சீரியலையே திசை திருப்பி வருகிறார்.

Also read: குணசேகரன் கேரக்டரை வள்ளலாக மாத்தி குளோஸ் செய்த எதிர்நீச்சல்.. மருமகள்களை ஆட்டிப் படைக்க வரும் அண்ணன்

அதாவது குணசேகரன் கேரக்டரை அப்படியே க்ளோஸ் செய்துவிட்டு அவருக்கு பதிலாக டபுள் மடங்கு ஆபத்தான அண்ணன் கதாபாத்திரத்தை கொண்டு வருகிறார். அவர் தான் ஆதி குணசேகரனின் இன்னொரு வடிவமாக ஆணாதிக்கம் செய்ய போகிறார். அந்த வகையில் இந்த கதாபாத்திரத்தை துணிச்சலுடன் எடுத்து நடிக்கப் போவது யார் என்றால் நடிகர் அழகம் பெருமாள் தான்.

இவரும் மாரிமுத்துவை போல இயக்குனர் மற்றும் நடிகராக பல படங்களில் பயணித்து வந்திருக்கிறார். ஆனால் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் தற்போது வரை திண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார். அதனால் இவரை சரியாக கொக்கி போட்டு சன் டிவி நிறுவனம் அதிகமான சம்பளத்தை கொடுத்து நடிப்பதற்கு கேட்டிருக்கிறார்கள்.

Also read: சமீபத்தில் சின்னத்திரையில் பட்டையை கிளப்பிய 5 பிரபலங்கள்.. மறைந்தாலும் மக்கள் மனதில் வாழும் ஆதி குணசேகரன்

அதிகமான சம்பளம் கொடுத்ததற்கு காரணம் குணசேகரன் இல்லாமல் டிஆர்பி ரேட் ரொம்பவே அடிபட்டுவிட்டது. அதனால் எப்படியாவது டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அழகம் பெருமாளுக்கு அதிகப்படியான சம்பளத்தை கொடுத்து எதிர்நீச்சல் டீம் கமிட் செய்திருக்கிறது.

இவர் இயக்கிய படங்கள் தான் டும் டும் டும், ஜூட், உதயா. இந்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று இருந்தாலும் தொடர்ந்து இவரால் இயக்குனராக பயணிக்க முடியவில்லை. அதனால் நடிப்பதில் ஆர்வம் காட்டி குணச்சித்திர கேரக்டரில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது குணசேகரனின் இடத்தை நிரப்புவதற்கு அவருடைய அண்ணனாக மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகிறார்.

Also read: வேல ராமமூர்த்திக்கு ஆப்பு அடித்த எதிர்நீச்சல் இயக்குனர்.. குணசேகரன் கதாபாத்திரத்தில் ஏற்பட்ட ட்விஸ்ட்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -