புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரபல நடிகையின் நிறைவேறாத காதல்.. முன்னாள் காதலியின் ஆசையை நிறைவேற்றிய கமல்!

உலக நாயகன் கமலஹாசனின் காதல் கதைகள் அத்தனையுமே எந்த ஒளிவு மறைவும் இன்றி சினிமா உலகத்துக்கு தெரிந்த ஒன்றுதான். வாணி கணபதி, சரிகா, கௌதமி என உறுதிப்படுத்தப்பட்ட உறவுகளும் இவருக்கு உண்டு. அதேபோல் சிம்ரன், ஆண்ட்ரியா, பூஜா குமார் என கிசுகிசுகளோடு முடிந்த உறவுகளும் இவருக்கு உண்டு. ஆனால் இதில் எந்த வகையிலுமே சேராத ஒரு நடிகையும் இருக்கிறார்.

இந்த நடிகையின் காதல் இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. ஒரு சிலர் இவர் கமலஹாசனை ஒருதலையாக தான் காதலித்தார் என்று சொல்கிறார்கள். ஒரு சிலர் கமலஹாசனும் இவரை காதலித்தார் ஆனால் அதே நேரத்தில் வாணி கணபதியையும் காதலித்து அவரை திருமணம் செய்து கொண்டு இவரை விட்டு விலகி விட்டார் என்றும் சொல்கின்றனர். ‘திரைக்கதா’ என்னும் மலையாள படம் கூட இவர்கள் இருவரை தழுவி தான் எடுக்கப்பட்டது.

Also Read:கமலஹாசனை ஓடவிட்ட ரஜினி.. மேடையில் ரகசியத்தை போட்டு உடைத்த உலக நாயகன்

தமிழில் சொல்லத்தான் நினைக்கிறேன் என்னும் திரைப்படத்தின் கமலுடன் இணைந்து நடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. அதன் பின்னர் அபூர்வராகங்கள், உணர்ச்சிகள் என்று ஒரு சில படங்களில் கமலஹாசன் உடன் இணைந்து நடித்தார். அப்போது இவர்கள் இருவருக்கும் காதல் இருப்பதாக செய்திகள் கூட வெளியாகின. பின் 1978 இல் கமலஹாசன், வாணியை மணந்த பிறகு கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவே இல்லை.

ஸ்ரீ வித்யா மலையாள தயாரிப்பாளர் ஜார்ஜ் தாமஸ் என்பவரை திருமணம் செய்து பின்பு விவாகரத்து பெற்று விட்டார். பின்னர் அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா போன்ற படங்களில் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த அவர் பின்பு கேரளாவுக்கே திரும்பி விட்டார். அந்த நேரத்தில் தான் ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிகிச்சையில் இருந்த அவர் யாரையுமே பார்க்க விருப்பமில்லை என்று தனிமையில் இருந்தார்.

Also Read:கமலுடன் இருக்க ஆசைப்படும் விக்ரம் பட நடிகை.. உலகநாயகன் மீது இப்படி ஒரு கிரஷா?

ஆனால் இறக்கும் தருவாயில் இருக்கும் பொழுது கமலஹாசனை பார்க்க வேண்டும் என்று இவர் சொல்லி இருக்கிறார். கமலஹாசனும், ஸ்ரீவித்யாவை நேரில் சென்று பார்த்து இரண்டு மணி நேரம் அவருடன் உரையாடி இருக்கிறார். ஸ்ரீவித்யா இறந்த பிறகு கமலஹாசன் அவருக்கான எழுதிய இரங்கல் மடலில் இறந்தும் இறவா தோழி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் கமலஹாசன் சினிமாவுக்கு வந்து அறுபது ஆண்டுகள் ஆன கொண்டாட்ட விழாவில் தன் வாழ்க்கையில் முக்கியமானவர்கள் என்று அவர் ஒரு காணொளியை பதிவிட்டிருந்தார். அதில் ஸ்ரீவித்யாவின் பெயர் முதலிலேயே இடம் பெற்றிருந்தது. எப்படி இருக்க கமல் எந்த ஒரு சூழ்நிலையிலும் தான் ஸ்ரீவித்யாவை காதலித்ததாக எப்போதுமே சொல்லியதில்லை.

Also Read:தென்னிந்திய சினிமாவை மிரட்டிய இந்தியன் 2.. இதுவரை எந்த படமும் செய்யாத சாதனை

- Advertisement -

Trending News