ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

வசூலில் பயத்தை காட்டிய ஷாருக்கான், பிரபாஸ்.. ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் தனுஷின் கேப்டன் மில்லர்

Dhanush – Captain Miller: இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அதன் விமர்சனத்தை தாண்டி, கலெக்ஷன் எவ்வளவு தெரிகிறது என்பதுதான் பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பாக்ஸ் ஆபீஸ் கலெக்சன் தான் அந்த நடிகரின் வெற்றியையும், அடுத்த படத்தின் சம்பளத்தையும் தீர்மானிக்கிற ஒன்றாக இருக்கிறது. இதனாலேயே இப்போது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கலெக்ஷன் விஷயத்தில் ரொம்பவும் உஷாராகி விட்டார்கள்.

முன்பெல்லாம் ஒரே நாளில் இரண்டு, மூன்று பெரிய ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் ஆகி போட்டியிடும். ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த போட்டி என்ற ஒன்று நடப்பதே கிடையாது. எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கும் ஹீரோக்களும் தங்களுடைய படங்களை சோலோவாக ரிலீஸ் செய்து இரண்டு, மூன்று வாரங்களில் 100 கோடி கிளப்பில் இணைந்து விடுகிறார்கள்.

Also Read:இவரை விட்டா வேற யாரும் இல்லைன்னு பொருத்தமான 5 கதாபாத்திரங்கள்.. சிவசாமியாய் வாழ்ந்த தனுஷ்

நடிகர் தனுஷ் கூட இப்போது இந்த ரூட்டைத் தான் கையில் எடுத்திருக்கிறார். என்னதான் கேப்டன் மில்லர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் என்றாலும், அதே மாதத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த டாங்கி திரைப்படம் மற்றும் பிரபாஸ் நடித்த சலார் படம் ரிலீஸ் ஆக இருப்பதால், தன் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு வாரத்திற்கு முன்பே லாக் செய்து விட்டார்.

நடிகர் ஷாருகான் சமீபத்தில் நடித்து வெளியான ஜவான் படம் கிட்டத்தட்ட வசூலில் ஆயிரம் கோடியை எட்டி விட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் அவர் படத்துடன் தன்னுடைய படத்தை ரிலீஸ் செய்தால் அடி வாங்கி விடுமோ என்ற ஒரு எண்ணம் தனுஷுக்கு இருந்திருக்கிறது. அதேபோன்றுதான் நடிகர் பிரபாஸின் படங்களும். அவர் நடித்ததிலேயே மொக்கை என சொல்லப்பட்ட ஆதி புரூஷ் படம் கூட கலெக்ஷனில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது.

Also Read:ஷூட்டிங்கில் ஹீரோ கொடுத்த அந்தரங்க டார்ச்சர்.. உண்மையை வெட்ட வெளிச்சமாக்கிய தனுஷ் பட தாய்க்கிழவி

இதனால் தான் சத்ரியனாக யோசிப்பதை விட, சாணக்கியனாக இருந்துவிடலாம் என தனுஷ் திட்டம் போட்டுவிட்டார். டிசம்பர் 15 இல் கேப்டன் மில்லர் ரிலீஸ் ஆகி, கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து தான் ஷாருக்கானின் படமும், பிரபாஸின் படமும் ரிலீஸ் ஆகிறது. இந்த ஒரு வார கேப்பில் முடிந்த அளவுக்கு வசூலை அள்ளிவிடலாம் என்ற நம்பிக்கை தனுஷுக்கு இருப்பதால், படத்தை தைரியமாக ரிலீஸ் செய்கிறார்.

ஆனால் நடிகர் பிரபாஸ் இந்த முறை நேருக்கு நேர் ஷாருக்கானின் படத்துடன் மோதுகிறார். சலாம் படம் கண்டிப்பாக பிரபாஸுக்கு பிரேக் கொடுக்கும் என சினிமா வட்டாரங்கள் கணித்து இருக்கிறார்கள். இப்போது ஷாருக்கான் படத்துடன் நேருக்கு நேர் மோதுவதால் படத்தின் வெற்றி தொய்வடையுமா அல்லது மீண்டும் பிரபாஸ் கலெக்ஷனில் முதலிடம் பிடிப்பாரா என இனி தான் தெரியும்.

Also Read:விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டிய தனுஷ்.. மாணிக் பாட்ஷாவாக மாறி ரஜினி மிரட்டிய சம்பவம்

- Advertisement -

Trending News