விவாகரத்து நடிகையுடன் நெருக்கம் காட்டிய தனுஷ்.. மாணிக் பாட்ஷாவாக மாறி ரஜினி மிரட்டிய சம்பவம்

Rajini-Dhanush: சூப்பர் ஸ்டார் வீட்டு பஞ்சாயத்து அனைவரும் அறிந்தது தான். அதிலும் தனுஷ், ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்தை விட்டு விலகியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமானார்.

அதில் ஒன்றுதான் விவாகரத்து நடிகையான அமலா பாலுடன் அவர் ஓவர் நெருக்கம் காட்டியது. இது குறித்து அரசல் புரசலாக மீடியாவில் பேசப்பட்ட நிலையில் இருவரின் விவாகரத்துக்கும் இதுவே ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

Also read: வெற்றிக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு.. என்னதான் சொகுசாக இருந்தாலும் ரஜினிக்கு இதுல கிடைக்க சுகமே வேற

வேலையில்லா பட்டதாரியில் ஆரம்பித்த இந்த நெருக்கம் ஒரே வீட்டில் தங்கும் அளவுக்கு வந்து இருக்கிறது. இது ரஜினியின் காதுக்கும் சென்று இருக்கிறது. உடனே தன்னுடைய மகளின் வாழ்க்கையை காப்பாற்ற அவர் அமலாபாலின் வீடு தேடி சென்றிருக்கிறார்.

அங்கு ரஜினி அவரிடம் தனுசுக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அதனால் அவரை விட்டு விலகி போங்க. இல்லையென்றால் எனக்கு இன்னொரு முகம் இருக்கு என்று மாணிக் பாட்ஷாவாக மாறி மிரட்டி இருக்கிறார்.

Also read: 72 வயதிலும் 1200 கோடி பட்ஜெட்டில் நடிக்கும் ரஜினி.. ரெண்டு வருடத்தில் 4 படங்களில் பிசி

அதன் பிறகு தான் அமலா பாலுக்கு வாய்ப்புகள் வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. இருப்பினும் அவ்வப்போது ஆடை உள்ளிட்ட சில படங்களில் நடித்து வந்த அவர் கடாவர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார்.

ஆனாலும் அவருக்கு இப்போது வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாள கரையோரமே ஒதுங்கி விட்டார். இவ்வாறாக தனுசுடன் நெருக்கம் காட்டிய இவருக்கு சூப்பர் ஸ்டார் பயத்தை காட்டிய விஷயத்தை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Also read: லோகேஷ்க்கு பின் பிரம்மாண்ட கூட்டணியில் தலைவர்-172.. ஹைப் குறையாம தொக்கா தூக்கிய ரஜினி

- Advertisement -