அஜித்தே ஏன் இந்த படத்தில் நடித்தோம்னு வெறுத்து போன 5 படங்கள்.. ஹைப் ஏத்தி பிளாப் ஆன ஜனா

Actor Ajithkumar: நடிகர் அஜித்குமாரை பொறுத்த வரைக்கும் அவருக்கு வெற்றி தோல்வி இரண்டுமே சமமாக கிடைத்த விஷயம் தான். தற்போது தமிழ் சினிமா உலகின் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் அவ்வப்போது ஒரு சில படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்திருக்கிறது. இதில் ஒரு சில படங்கள் ஏன் நடித்தோம் என அவரே யோசிக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது. அப்படி அஜித்தை யோசிக்க வைத்த ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

ஜி: இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித் மட்டும் திரிஷா இணைந்து நடித்த படம் தான் ஜி. இந்த படம் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் அஜித் கல்லூரி மாணவராக நடித்திருப்பார். அவர் உடல் தோற்றம் மற்றும் முக பாவனைக்கு, கல்லூரி மாணவன் என்ற கதாபாத்திரம் செட் ஆகாததால் அப்போது பலரின் கேலிக்கு உள்ளானார்.

Also Read:சத்தம் இல்லாமல் அஜித் செய்யும் பெரிய விஷயம்.. என்ன மனுஷன் இவரு, அதான் சாமின்னு கொண்டாடுறாங்க

ரெட்: ஏழைகளுக்கு உதவும் முரட்டுத்தனமான கதாநாயகன் என்ற தமிழ் சினிமாவின் வழக்கமான மசாலா கதை தான் ரெட் படம். இதில் கதாநாயகி உடனான காதல், ஆனந்த விகடனில் வரும் கதை என, திரை கதையை சரியாக கொண்டு போகாமல் சொதப்பியதால் படம் தோல்வி அடைந்தது. இருந்தாலும் இன்று வரை அஜித் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக இது இருக்கிறது.

ராஜா: அஜித் நடிப்பில் இப்படி ஒரு படம் ரிலீஸ் ஆனது பலருக்கும் தெரியாது. நல்ல ஒரு காதல் கதையாக, பீல் குட் படமாக இருக்க வேண்டிய இந்த படம் ஏதோ ஒரு சருக்கலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்காமல் போனது. வடிவேலு மற்றும் அஜித் காமெடி கூட அந்த அளவுக்கு ரசிக்கும் படி எல்லாம் இந்த படத்தில் இருக்காது.

Also Read:ஆடியோ லான்சை கேன்சல் பண்ணிட்டோமே தமிழ்நாட்ட குடுத்துருங்க.. உதயநிதிக்கு அஜித் கொடுத்த பதிலடி மீம்ஸ்

ஜனா: அஜித் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான படம் ஜனா. கிராமத்தில் நல்லவராக வாழ்ந்து வரும் அஜித்தின் ஃப்ளாஷ் பேக்கில் மும்பையில் ஒரு மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார். அங்கே வில்லனை கொன்றுவிட்டு தமிழ்நாடு வந்து அமைதியாக வாழ்வது போல் கதை அமைக்கப்பட்டது அப்படியே பாட்ஷா படத்தின் கதை போல இருந்தது. இந்த படம் மிகப்பெரிய ஹைப் ஏற்றி. தோற்றுப் போனது.

ஆஞ்சநேயா: நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார். ரவுடிகளின் கும்பலில் ஒருவராக நுழைந்து குற்றத்தை கண்டுபிடிக்கும் போலீசாக இவர் நடித்திருந்தார். இது தமிழ் சினிமாவின் ரொம்ப பழைய கதை என்பதால் ரசிகர்களிடையே எடுபடாமல் போனது.

Also Read:விடாமுயற்சியில் நடிக்கும் விஜய்யின் அப்பா.. வெளிவந்த புகைப்படத்தின் காரணம் இதுதான்

- Advertisement -