ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 3, 2024

61 வயதில் பிரம்மாண்ட கோவில், பங்களா, 42 வருட அனுபவம்.. ஆக்சன் கிங்கின் மொத்த சொத்து மதிப்பு

Actor Arjun: ஒரு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட அர்ஜுன் இன்று தன்னுடைய 61 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார்.

இவ்வாறு 42 வருடங்களாக சினிமாவில் நிலைத்து நிற்கும் இவர் தற்போது லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை அடுத்து அஜித், சூப்பர் ஸ்டார் என டாப் நடிகர்களுடன் இணைவதற்கும் இவர் தயாராகிக் கொண்டிருக்கிறார்.

Also read: மகள் மார்க்கெட்ல விலை போகலனு தெரிந்து தூக்கி விடும் அப்பா.. இயக்குனர் அவதாரம் எடுக்கும் லியோ பட வில்லன்

இப்படி இரண்டாவது இன்னிங்ஸில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் அர்ஜுனின் முழு சொத்து மதிப்பு விவரம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்தனை வருட சினிமா வாழ்வில் அவர் 80 கோடி வரை சொத்துக்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

அதிலும் பிஎம்டபிள்யூ, ஆடி கார் உட்பட பல ரகங்களில் இவரிடம் விலை உயர்ந்த கார்கள் இருக்கிறதாம். அது மட்டுமல்லாமல் பிரம்மாண்ட பங்களா, பண்ணை வீடு என இவருக்கு ஏகப்பட்ட சொத்துக்கள் இருக்கின்றன. அதிலும் இவர் மிகச்சிறந்த ஹனுமன் பக்தர் ஆவார்.

Also read: இமையமலையிலிருந்து வந்த ஸ்பீடில் ரஜினி ஆரம்பிக்க போகும் தலைவர்-171.. ரிலீசுக்கு நாள் குறித்த லோகேஷ்

அதனாலேயே சென்னை கிருகம்பாக்கம் பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் ஒரு பிரம்மாண்ட ஆஞ்சநேயர் கோவிலையும் இவர் கட்டி இருக்கிறார். அர்ஜுனின் மிகப்பெரும் கனவாக இருந்த இந்த கோவில் கடந்த 2021 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

200 டன் எடை கொண்ட அந்த ஆஞ்சநேயர் 28 அடி உயரமும், 17 அடி அகலமும் கொண்டு உருவாக்கப்பட்டது. இவ்வாறாக பல விஷயங்களை மேற்கொண்டு வரும் இந்த ஆக்ஷன் கிங் ஆரம்ப காலகட்டத்தில் சில லட்சங்களில் மட்டுமே சம்பளம் வாங்கி வந்தார். அதை தொடர்ந்து தற்போது அவர் லியோவுக்காக 5 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆண்டவரை நம்பி மோசம் போன 5 நடிகர்கள்.. அர்ஜுன் மார்க்கெட் போக காரணமாக இருந்த படம்

- Advertisement -spot_img

Trending News