சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

விக்ரமனை அடுத்து அபியூஸ் அசீம் வெளியிட்ட வைரல் ட்வீட்.. ச்சே இவரை போய் கருப்பு ஆடுன்னு சொல்லிட்டோமே

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவுற்றது. இதில் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்தை பெற்றுள்ளார். மேலும் 50 லட்சம் தொகை அசீமுக்கு தான் கிடைத்துள்ளது. இந்நிலையில் அசீம் வெற்றி ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதனால் கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் அபியூஸ் அசீம் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. மேலும் உண்மையான வெற்றி என்பது விக்ரமனுக்கு தான் கிடைத்திருக்க வேண்டும் என்றும் விஜய் டிவியின் சூழ்ச்சியால் அசீம் வென்றதாக ரசிகர்கள் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வந்தனர். இதனால் அசீம் வெற்றியைக் கூட சந்தோஷமாக கொண்டாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

Also Read : அசீம் 50 லட்சம் ஜெயிச்சாலும் டைட்டில் வின்னருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.. கைக்கு எட்டனது வாய்க்கு எட்டாம போச்சே

மேலும் விக்ரமனை தான் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது அசீமின் ட்வீட் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது. அதாவது பிக் பாஸ் வெற்றி மேடையில் தனக்கு கிடைத்த பணத்தில் பாதியை குழந்தைகளின் படிப்பு செலவுக்காக கொடுக்க உள்ளதாக அசீம் தெரிவித்தார். இதெல்லாம் சும்மா கட்டுக்கதை என ரசிகர்கள் கூறி வந்தார்கள்.

அதுமட்டுமின்றி இவர் கருப்பு ஆடு என திட்டி ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்த நிலையில் அசீம் தனது சமூக வலைதள பக்கத்தில் பிக் பாஸில் தான் வென்ற 50 லட்சத்தில் 25 லட்சத்தை கொரோனா தொற்றின் போது பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் கல்வி செலவுக்கு நன்கொடையாக வழங்குவதாக பதிவிட்டுள்ளார்.

Also Read : அசீம், விக்ரமன், ஷிவின் என பைனல் லிஸ்ட் வாங்கிய சம்பளம்.. வாரி வழங்கிய பிக் பாஸ்

இதைப் பார்த்த அசீம் ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள். மேலும் அசீமை திட்டியவர்கள் கூட இந்த பதிவை பார்த்து அவரை தவறாக நினைத்து விட்டோம் என்று தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். கோபம் உள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்று சொல்வது போல கோபத்திற்கு பின்னால் அசீமின் நல்ல மனம் இப்போது வெளிப்பட்டுள்ளது.

மேலும் ட்விட்டரில் அசீமின் இந்த பதிவு தற்போது ட்ரெண்ட்டாகி வருகிறது. கடந்த சீசன்களில் இது போன்று யாரும் செய்யாத ஒன்றை அசீம் முன் வந்து குழந்தைகளின் படிப்பு செலவுக்கு உதவும் மிகப்பெரிய விஷயமாகும். நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் தனது வெற்றியால் ஒரு நல்ல விஷயத்தை முன் வைத்துள்ளார்.

ஆனால் அசீம் வென்ற 50 லட்சத்தில் 18% டேக்ஸ் போக மீதமுள்ள பணம் தான் அவரைச் சேரும். இதில் 25 லட்சத்தை குழந்தைகள் படிப்பு செலவுக்கு கொடுப்பது எப்படி சாத்தியமாகும் என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

azeem-bigg-boss-6

Also Read : அசீம் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது.. விஜய் டிவிக்கு எதிராக இணையத்தில் கொந்தளித்த கூட்டம்

- Advertisement -

Trending News