ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

பல வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.. டாப் நடிகர்களுக்கு போட்டியாக வரும் சாந்தனு

இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் அதன் பின்பு வெளியான படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து சாந்தனு சருக்கலை சந்தித்து வந்தார்.

ஆனாலும் மனம் தளராமல் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மதயானை கூட்டம் படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் இராவண கோட்டம் படத்தில் கதாநாயகனாக சாந்தனு நடித்துள்ளார்.

Also Read : முட்டி மோதிப் பார்த்த சாந்தனு.. நமக்கு என்ன வருதோ அதை செஞ்சுகிட்டு போயிட்டே இருக்கணும்!

இந்த படத்தில் கதாநாயகியாக கயல் பட ஆனந்தி நடித்துள்ளார். மேலும் படத்தின் போஸ்டர், பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் வருகின்ற 18-ஆம் தேதி ராணுவ கோட்டம் படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

அதுவும் முதல்முறையாக சாந்தனுவின் பட ஆடியோ லான்ச் துபாயில் நடைபெறுகிறது. பொதுவாக டாப் நட்சத்திரங்களின் படங்களுக்கு மட்டும் தான் வெளிநாடுகளில் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடக்கும். இப்போது சாந்தனுவும் டாப் நடிகர்களுக்கு போட்டியாக தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவை வெளிநாட்டில் வைத்துள்ளார்.

Also Read : ஹாலிவுட் க்கு நிகராக தமிழில் வெளிவந்த 5 திருட்டு காட்சிகள்.. துணிவு அஜித்தை மிஞ்சிய ருத்ர பாக்யராஜ்

மேலும் இந்த நிகழ்ச்சியில் முக்கிய பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ கோட்டம் படத்தை கண்ணன் ரவி தயாரிக்க ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சாந்தனுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

ஆகையால் படமும் வெற்றி பெற சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சாந்தனுவின் பல வருட போராட்டத்திற்கு ராணுவ கூட்டம் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் நம்புகிறார்கள். இந்த படத்தின் ரிலீஸுக்காகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Also Read : இரண்டே வருடத்தில் முடிவுக்கு வந்த பாக்யராஜின் முதல் கல்யாணம்.. மனைவி எப்படி இறந்து போனார் தெரியுமா?

- Advertisement -

Trending News