விஜய் வாரிசுக்கு அதிர்ச்சி நோட்டீஸ்.. திருட்டுத்தனமாக படக்குழு செய்த வேலையால் தலைகுனித்த தளபதி

varisu
varisu

தளபதி விஜய் முதல்முறையாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய பட குழு முடிவெடுத்து இருக்கிறது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு திடீரென்று ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதாவது விஜய் மற்றும் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா இருவரும் கலந்து கொள்ளும் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பிற்கு 5 யானைகள் கொண்டுவரப்பட்டு படப்பிடிப்பில் பங்கேற்க வைத்துள்ளனர்.

Also Read: நாலாபக்கமும் பிரச்சனையை சந்தித்து வரும் விஜய்யின் வாரிசு.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய தயாரிப்பாளர்

இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் காட்டுத்தையாய் பரவுகிறது. உடனே இந்த விஷயத்தை அறிந்ததும் விலங்குகள் நல வாரியம் அனுமதியின்றி யானைகளை படப்பிடிப்பில் கலந்து கொள்ள வைத்ததற்காக வாரிசு படக் குழுவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதனால் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் வாரிசு படத்திற்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்றும் ரசிகர்கள் பதறுகின்றனர். அத்துடன் அனுமதியின்றி திருட்டுத்தனமாக படக்குழு 5 யானைகளை படப்பிடிப்பில் கலந்து கொள்ள செய்த வேலையால் தளபதி விஜய் தற்போது தலை குனிகிறார்.

Also Read: விஜய்யை கெடுத்த தில் ராஜ்.. இனி புலம்பி என்னத்துக்கு வச்ச ஆப்பு கொஞ்சம் பெருசுதான்

ஆனால் இதெல்லாம் பட ப்ரமோஷன்காக பட குழு செய்த வேலை என்றும் சொல்கின்றனர். எப்படியும் கேஸ் ஒன்னும் இல்லாமல் படம் ரிலீஸ் ஆக தான் போகும். அப்படி இருக்கையில் எதற்கு இந்த ப்ரோமோஷன் என்று தெரியவில்லை. பொதுவாக ரிலீஸ் ஆகும் ஒவ்வொரு விஜய் படங்களும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி ரசிகர்களிடம் எளிதாக புரமோட் ஆகும்.

அப்படிதான் வாரிசு படமும் 5 யானைகளை வைத்து தங்களது படம் புரமோஷனை நிகழ்த்தியுள்ளனர். இது தெரியாமல் ரசிகர்களும் வாரிசு பட ரிலீசுக்கு பிரச்சனை வந்து விடுமா என்று பதங்குவது தான் பெரிய காமெடி.

Also Read: இப்ப வாங்க ஒரு கை பார்க்கலாம், நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்.. உச்சகட்ட பயத்தில் துணிவு

Advertisement Amazon Prime Banner