வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

இந்த வார டிஆர்பி யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்.. எதிர்நீச்சலை பின்னுக்கு தள்ளிய டிவி எது தெரியுமா?

Serial TRP: முன்பெல்லாம் மக்கள் தங்களுக்கு பிடித்த சீரியல்களை விரும்பி பார்த்துவிட்டு அதோடு முடித்துக் கொள்வார்கள். ஆனால் சில வருடங்களாக தாங்கள் பார்க்கும் சீரியல்கள் டிஆர்பி யில் எந்த வரிசையில் இருக்கிறது என்பதை பார்ப்பதற்கும் ஆர்வமாக இருக்கிறார்கள். அதே போன்று பெண்கள் மட்டுமில்லாமல் தற்போது ஆண்கள், குழந்தைகள் என அனைவருமே சீரியலை விரும்பிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் வெளியாகும். இந்த வாரம் முதல் ஆறு இடத்தில் இந்த சீரியல்கள் இருக்கின்றன.

இனியா: சின்னத்திரை நடிகை ஆலியா மானசா நடிக்கும் மூன்றாவது சீரியல் தான் இனியா. இந்த சீரியல் ஆரம்பித்ததில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி யில் இது ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறது.

மிஸ்டர் மனைவி: செம்பருத்தி சீரியல் மூலம் அறிமுகமான சீரியல் நடிகை ஷபானாவின் இரண்டாவது தொடர் தான் மிஸ்டர் மனைவி. இதில் பாவன் ஷபானாவிற்கு ஹீரோவாக நடித்திருக்கிறார். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த சீரியலில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த சீரியல்தான் இப்பொழுது ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

Also Read:மறுஜென்மம் பெற்ற தனம்.. இறுதி அத்தியாயத்தை நோக்கி பாண்டியன் ஸ்டோர்ஸ்

வானத்தை போல: அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையேயான சென்டிமென்ட் காட்சிகளை வைத்து வெற்றி பெற்று கொண்டிருக்கும் சீரியல் வானத்தைப்போல. இந்த சீரியல் இந்த வார டிஆர்பி யில் நான்காவது இடத்தில் இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வானத்தைப்போல சீரியல் இன்றுவரை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சுந்தரி: சன் டிவியின் சீரியல்களில் மக்களின் பேராதரவோடு பரப்ப வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் சீரியல்தான் சுந்தரி. கடந்த வார கதைகளம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இதனால் இந்த சீரியல் டிஆர்பி யில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

எதிர்நீச்சல்: பொதுமக்களின் அமோக வரவேற்பை பெற்ற ஒரே சீரியல் எதிர்நீச்சல் தான். இந்த சீரியலில் தற்போது சொத்து ட்ராக் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஆதிரை- கரிகாலன்- அருண் என ஒரு பக்கம், ஈஸ்வரி- ஜீவானந்தம் ட்விஸ்ட் ஒரு பக்கம் என சென்று கொண்டிருக்கும் இந்த சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

Also Read:அட எதிர்நீச்சல் குணசேகரன் எல்லாம் சும்மாதான்.. இந்த நடிகை இல்லனா சன் டிவி டிஆர்பி இல்லையாம்!

கயல்: எதிர்நீச்சல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்திருப்பது கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவி நடிக்கும் இந்த சீரியலில் தற்போது கல்யாண டிராக் போய்க் கொண்டிருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாது கதைக்களம் அமைந்திருக்கிறது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ஏழாவது இடத்திலும், சிறகடிக்க ஆசை எட்டாவது இடத்திலும், பாண்டியன் ஸ்டோர் ஒன்பதாவது இடத்திலும், அன்பே வா சீரியல் 10வது இடத்திலும் இருக்கிறது.

Also Read:தூங்கு மூஞ்சி அருணை நினைத்து புது மாப்பிள்ளையே வெறுக்கும் ஆதிரை.. எக்ஸ் காதலியே பார்க்க மறுத்த ஜீவானந்தம்

- Advertisement -

Trending News