சூப்பர் ஸ்டாரோடு மோதலா.? வெளிவந்த வேட்டையன், கங்குவா ரிலீஸ் சீக்ரெட்

Kanguva-Vettaiyan: இந்த வருடத்தின் இரண்டாம் பாதி தமிழ் திரையுலகை பொருத்தவரையில் ஜோராக இருக்கிறது. முதல் பாதியில் பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த சமயத்தில் தான் சுந்தர் சி-யின் அரண்மனை 4, கருடன், விஜய் சேதுபதியின் மகாராஜா ஆகிய படங்கள் வந்து கோலிவுட்டை தூக்கி நிறுத்தியது. அதைத்தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

அதன் தொடக்கமாக கமலின் இந்தியன் 2 நாளை ஆரவாரமாக ரிலீஸ் ஆக இருக்கிறது. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு 10 கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது. அதனாலேயே படத்தின் வசூலும் அமோகமாக இருக்கும் என கூறுகின்றனர்.

இதை அடுத்து விஜயின் கோட், சூர்யாவின் கங்குவா சூப்பர் ஸ்டாரின் வேட்டையன், அஜித்தின் விடாமுயற்சி என தொடர்ச்சியாக படங்கள் வெளிவர இருக்கிறது. இதில் கங்குவா அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே தேதியில் தான் வேட்டையன் படமும் வெளியாகும் என கூறுகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு அக்டோபர் மாதம் வெளியாகும் என்றுதான் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் சூப்பர் ஸ்டார் படம் வெளிவருகிறது என்றால் எந்த ஹீரோவும் அதற்கு போட்டியாக வரமாட்டார்கள். அப்படி இருக்கும்போது சூர்யா ரஜினியோடு போட்டி போடுவது ஒரு சுவாரசியத்தையும் ஏற்படுத்தியிருந்தது.

ரஜினியோடு போட்டி போடும் சூர்யா

இது சில சர்ச்சையாகவும் மாறிய நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கங்குவார் படத்தை 300 கோடி செலவில் எடுத்துள்ள அவர் ரஜினியோடு போட்டி போட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

என் அம்மா அப்பா பிறந்த நாளுக்கு கோவிலுக்கு செல்வேன். ஆனால் ரஜினி சாரின் பிறந்தநாளுக்கு கோவிலுக்கு சென்று 108 முறை சுற்றி வருவேன். அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு மதிப்பு மரியாதை பாசம் இருக்கிறது.

அப்படி இருக்கும் போது எப்படி நாங்கள் அவருக்கு போட்டியாக படத்தை வெளியிடுவோம் உண்மையில் வேட்டையன் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தான் வெளிவர இருக்கிறது. அப்படித்தான் தயாரிப்பு தரப்பு ப்ளான் செய்து வருகின்றனர்.

அதை வைத்து பார்க்கும் போது அக்டோபர் 10ஆம் தேதி எந்த பெரிய படங்களும் வெளியாகவில்லை. அந்த தேதி காலியாக இருந்ததால் தான் நாங்கள் அதை உறுதி செய்தோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.

மேலும் வேட்டையனுடன் போட்டி என்ற வதந்தியை சோசியல் மீடியாவில் பல பேர் பரப்பி வருகின்றனர். அவர்கள் சம்பாதிக்க இப்படி ஒரு செய்தியை வெளியிடுகின்றனர். ஆனால் அதில் உண்மை கிடையாது என ஆணித்தரமாக தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பல நாள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. ஆக மொத்தம் இந்த வருட தீபாவளி சூப்பர் ஸ்டாரின் சரவெடியாக இருக்கப் போகிறது. அதே நேரத்தில் விடாமுயற்சி நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்டையன் கங்குவா சர்ச்சைக்கு கிடைத்த முடிவு

Next Story

- Advertisement -