Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் பல வருடங்களாக இழுபறியில் இருந்த அயலான் ஒரு வழியாக ரிலீசுக்கு தயாராகி விட்டது. ரவிக்குமார் இயக்கத்தில் ஆர் டி ராஜா தயாரிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மூலம் அந்த ரேஸில் இருந்து அயலான் விலகியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் அடுத்த வருட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இப்போது வெளிவந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் ஹீரோ பாணியில் வெளிவந்த மாவீரன் வசூலில் சக்கை போடு போட்டது. அதனாலேயே அயலானும் இந்த வருடம் வெளிவந்து டபுள் ட்ரீட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர்.
ஏனென்றால் இப்படம் ஏலியனை மையப்படுத்தி உருவாகும் சயின்ஸ் ஃபிக்சன் சம்பந்தப்பட்ட கதையாகும். இதற்காகவே தயாரிப்பு தரப்பு 40 கோடிக்கும் மேல் செலவழித்து கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் சம்பந்தப்பட்ட காட்சிகளை வடிவமைத்திருந்தனர்.
Also read: சிவகார்த்திகேயன், தனுஷ் போல பேராசைப்படாமல் காய் நகர்த்தும் ஹீரோ.. கையில் இருக்கும் ஒரு டஜன் படங்கள்
மேலும் இப்பணிகள் முடிவடைவதற்கு 10 மாதங்கள் தேவைப்பட்டிருக்கிறது. இப்படி பல விஷயங்களில் மெனக்கெட்டிருக்கும் படகுழு தற்போது இறுதி கட்ட பணிகளில் தீவிரமாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஏலியன் துணையோடு களமிறங்கும் சிவகார்த்திகேயன் அடுத்த வருட சம்பவத்திற்கு தயாராகி விட்டார்.