New Virus: என்னடா நடக்குது இங்க என்று வடிவேலு சொல்லுவது போல் நடக்கிற விஷயத்தை எல்லாம் பார்த்தால் தல சுற்றிவிடும் போல. அதாவது இயற்கை சீற்றங்களால் எத்தனையோ மக்கள் அவஸ்தை பட்டு எதிர்பார்க்காத அளவில் பேராபத்தை கொடுத்திருக்கிறது. இது போதாது என்று அவ்வப்போது ஏதாவது புதுசாக ஒரு நோய் வந்து மக்களை ஆட்டிப் படைக்கிறது.
அதற்கு வித்தியாச வித்தியாசமாக பெயரை வைத்து கதி கலங்க விடுகிறது. அப்படி தான் சமீபத்தில் கொரோனா என்ற நோய் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப் படைத்தது. அதிலிருந்து மீண்டு வந்த பொழுது இப்பொழுது புது வைரஸ் நோய் கொஞ்சம் கொஞ்சமாக பரவி பெரிய ஆபத்தை விளைவிக்கதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த அறிவுரைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்
ஏற்கனவே டெங்கு மற்றும் சிக்கன் குனியா போன்ற வைரஸ் உயிருக்கு ஆபத்துக்களை உண்டாக்கியது. தற்போது இதுபோல புது வைரசாக வந்திருப்பது ஜிகா வைரஸ். இது ஏடிஎஸ் என்ற கொசு மூலம் பரவக்கூடிய வைரஸ். இது உயிருக்கு ஆபத்தாக இல்லை என்றாலும், தற்போது கருவில் உள்ள குழந்தைகளை பாதிக்கும் அளவிற்கு கர்ப்பிணி பெண்களை தாக்குகிறது.
அதாவது மகாராஷ்டிராவில் 8 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறிந்த நிலையில் தொடர்ந்து மற்ற மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை படி ஏடிஎஸ் கொசுக்கள் இல்லாத வகையில் வளாகங்களை பராமரிக்கவும், சுகாதார நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தொடர்பான அலுவலகங்களில் அடையாளம் காணுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த ஜிகா வைரஸ் கருவுற்ற பெண்களை அதிகமாக பாதிப்பதாக, அவர்களை முழுமையாக கண்காணிக்கவும் அதற்கான மருந்துகளை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிறுவனங்களுக்கு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகிறது. அதன்படி கருவில் உள்ள குழந்தைகளுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறிய வேண்டும் என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ் கடந்த 2016 ஆம் ஆண்டு குஜராத்தில் முதல் முறையாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை அடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், டில்லி போன்ற பல மாநிலங்களிலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஜூலை 2ம் தேதி வரை மகாராஷ்டிராவில் 8பேர் இந்த ஜிகா வைரஸால் பாதிப்படைந்து இருக்கிறார்கள்.
இதனால் மருத்துவமனைகளில் ஒரு கண்காணிப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளை எளிதாகத் தாக்கும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாயிருக்கிறது. அதிலும் காய்ச்சல், தோல் வெடிப்பு, தலைவலி, கண் இமைகளில் வீக்கம், மூட்டு வலி ஆகிய பிரச்சினைகள் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதுதான் ஜிகா வைரஸின் அறிகுறிகளாக இருக்கிறது. மேலும் பகலில் கடிக்கும் கொசுக்களால் ஜிகா வைரஸ் பரவுவதாகவும் வைரசால் கர்ப்பிணி பாதிக்கப்பட்டு கருவில் நோய் தாக்கவும் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் ஏடிஎஸ் கொசுக்கள் உற்பத்தியாகாமல் பார்த்துக் கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.