எதிர்நீச்சல் இடத்தை கெட்டியாக பிடித்த புது சீரியல்.. சன் டிவி கலாநிதி மாறன் போட்ட பிளான் ஒர்க் அவுட் ஆயிட்டு

New Serial taken ethirneechal Place: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் பெரும்பாலான சீரியல்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்து விடுகிறது. அதிலும் மாலையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே அமோக வரவேற்பு உண்டு. அந்த வகையில் சமீபத்தில் முடிந்த எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்து விட்டது.

தொடர்ந்து ஒரு வருடமாக டிஆர்பி ரேட்டிங்கில் கிங்காக ஜொலித்த எதிர்நீச்சல் சில காரணங்களால் தடுமாறி பின்னடைவை சந்தித்தது. இதனால் சன் டிவி சேனலில் பிரேம் டைம் உங்களுக்கு கிடையாது என்று சொல்லிய நிலையில் இயக்குனர் திருச்செல்வம் அப்படி என்றால் இந்த நாடகத்தை இதோட முடித்துக் கொள்கிறேன் என்று அவசரமாக முடித்து விட்டார்.

சக்க போடு போடும் மருமகள் சீரியல்

சன் டிவி சேனல், அப்படி நெருக்கடி கொடுத்ததற்கு காரணம் புது சீரியல்கள் வரிசை கட்டி இருந்தது தான். அதனால் சன் டிவி போட்ட பிளான் படி எதிர்நீச்சல் சீரியல் முடிந்தவுடன் அந்த பிரேம் டைமில் புத்தம் புது சீரியலான மருமகள் சீரியலை உள்ளே கொண்டு வந்து இறக்கி விட்டார்கள். அப்படி ஆரம்பித்த இந்த மருமகள் சீரியல் ஒரு மாதத்திற்குள்ளே டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

எப்படி எதிர்நீச்சல் சீரியலுக்கு மக்கள் ஆதரவு கொடுத்தார்களோ, அதே போல தற்போது மருமகள் சீரியலை பார்க்க ஒரு நாளும் தவிர விடுவதில்லை. டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடத்தை பிடித்து கலாநிதி போட்ட பிளான் படி ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதிலும் ஆதிரை மற்றும் பிரபுவின் கேரக்டர் எதார்த்தமாகவும் சித்திக் கொடுமையை அப்பாவுக்காக தாங்கிக் கொள்ளும் ஆதிரையின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு பாவமாக மக்களுடன் ஒன்றி போயி விட்டது.

இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப சன் டிவியில் மருமகள் சீரியல் மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டது. இதனை அடுத்து இந்த வாரத்தை தொடர்ந்து இனிவரும் வாரங்களில் மருமகள் சீரியல் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை தொட்டுவிடும். அதேபோல சுந்தரி சீரியலும் இன்னும் சில வாரங்களில் முடியப்போகிறது. அதற்கு பதிலாக ஆடுகளம் என்ற சீரியல் கொண்டு வருவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளிவந்த புது நாடகமான மணமகளே வா என்ற சீரியல் மதியம் பூவா தலையா என்ற நாடகத்திற்கு பதிலாக வரப்போகிறது. இதனை தொடர்ந்து இன்னும் சில சீரியல்கள் அடுத்தடுத்து சன் டிவிக்குள் நுழையப் போகிறது. அந்த வகையில் எதெல்லாம் டிஆர்பி யில் அடி வாங்கிட்டு வருகிறதோ அதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்டி வருகிறது சன் டிவி.

சன் டிவியை ஆக்கிரமிக்கும் சீரியல்கள்

Next Story

- Advertisement -