மேக்கப் மேனை பெரிய தயாரிப்பாளர் ஆக்கிய நடிகை.. ரஜினி பட ஹீரோயினுக்கு இருந்த தாராள மனசு

பொதுவாக சினிமா கலைஞர்கள் தங்களால் இயன்ற உதவிகளை தங்களுடன் இருப்பவர்களுக்கும், சாமானிய மக்களுக்கும் செய்வார்கள். இது போன்ற உதவிகள் அவ்வப்போது வெளிவரக்கூடும். அப்படித்தான் ரஜினி பட ஹீரோயின் ஒருவர் தன்னுடைய மேக்கப் மே எனக்கு மிகப்பெரிய உதவியை செய்து இருக்கிறார். அது அவருடைய வாழ்க்கையை முற்றிலும் மாற்றி இருக்கிறது.

90களின் காலகட்டத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் தான் நடிகை விஜயசாந்தி. இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கும் ரொம்பவும் பரீட்சையமானவர். இத்தனைக்கும் அவர் தமிழில் ஒன்றிரண்டு படங்களில் தான் நடித்திருக்கிறார். இவர் தனி கதாநாயகியாக நடித்த விஜயசாந்தி ஐபிஎஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read:வாரிசு நடிகருக்கு வில்லன் வாய்ப்புக்கொடுத்த ரஜினி.. ரஜினி இல்லைனா இன்னைக்கு இவர் இல்ல

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில் விஜயசாந்தி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். என்ன தான் ஜோடியாக இருந்தாலும் வழக்கமான கதாநாயகிகளை போல் இல்லாமல் தன்னுடைய வில்லத்தனத்தில் மிரட்டி இருப்பார். படையப்பா நீலாம்பரிக்கு முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை எதிர்த்த வில்லி விஜயசாந்தி தான்.

விஜயசாந்தி பலருக்கு தன்னால் முடிந்தவரை பல உதவிகளை செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்னவென்றால் தன்னிடம் மேக்கப் மேனாக பணிபுரிந்தவரை படிப்படியாக முயற்சி செய்து மிகப்பெரிய தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார். இந்திய அளவில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ சூர்யா மூவிஸின் நிறுவனரான ஏஎம் ரத்னம் தான் அவர்.

Also Read:பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சூப்பர்ஸ்டார்.. யாரும் நஷ்டப்படாமல் அப்பவே ரஜினி செய்த பேருதவி

இவர் தெலுங்கில் பல படங்களை தயாரித்து இருக்கிறார். 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த ரவிகிருஷ்ணாவின் அப்பா தான் இவர். தமிழில் சங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் தான் இவர் முதன்முதலில் தயாரித்து இருக்கிறார். அதன்பின்னர் நட்புக்காக, காதலர் தினம், குஷி, தூள், கில்லி போன்ற பல ஹிட் படங்களை தயாரித்து இருக்கிறார்.

முதன்முதலில் இவர் நடிகை விஜயசாந்தி நடித்த கர்த்தவ்யம் என்னும் திரைப்படத்தி 1991 ஆம் ஆண்டு தயாரித்து இருக்கிறார். இந்த படத்திற்காக விஜயசாந்திக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரு மேக்கப் மேனாக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய ரத்னத்தை விஜயசாந்தி தன்னுடைய முயற்சியால் இந்தியாவின் புகழ்பெற்று தயாரிப்பாளராக மாற்றியிருக்கிறார்.

Also Read:ஷங்கரிடம் இருந்த கெட்ட பழக்கம்.. ஒரே மீட்டிங்கில் உடைத்தெறிந்த சூப்பர் ஸ்டார்

 

 

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்