6 பொண்டாட்டி வைத்திருந்த ஒரே நடிகர், எம்ஜிஆரின் எதிரி.. எத செஞ்சாலும் கெத்தா சொல்லிட்டு செய்யணும்

MGR: பொதுவாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் தங்களைப் பற்றிய நெகட்டிவ் விஷயங்கள் வெளியில் தெரியாத அளவிற்கு பார்த்துக் கொள்வார்கள். அதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் அவர்களுடைய படங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் தான். இதில் ஒரு சிலரே நான் இப்படித்தான் என்னை பிடித்திருந்தால் என் படத்தை பாரு இல்லனா உன் விருப்பம் என உண்மையாக இருப்பவர்கள்.

அப்படித்தான் இந்த நடிகரும், ஆமா நான் ஆறு கல்யாணம் செஞ்சி இருக்கேன் என தைரியமாக வெளியில் சொன்னவர். அன்றைய காலகட்டத்தில் இருந்து ஒரு நடிகர் அல்லது நடிகை விவாகரத்து செய்து விட்டாலே அவர்களுடைய படங்களுக்கு ஆதரவு கிடைப்பது என்பது கஷ்டம். அப்படி இருக்கும் போதும் இந்த நடிகருக்கு இன்று வரை மக்களிடையே நல்ல ஆதரவு இருக்கிறது.

Also Read:மூன்று திருமணம் செய்து உல்லாசமாக வாழ்ந்த 5 நடிகர்கள்.. காதல் மன்னனை பார்த்து பொறாமையில் பொங்கிய திரையுலகம்

தமிழ் சினிமாவில் நடிக வேள் என அழைக்கப்பட்ட பன்முக கலைஞன் எம் ஆர் ராதா தான் அந்த நடிகர். இப்போதைய வில்லன் நடிகர்களுக்கு எல்லாம் முன்னோடியே இவர் தான். வில்லத்தனத்தை நக்கல் கலந்த சமூக விழிப்புணர்வு விஷயங்களோடு செய்தவர். மனதில் பட்டதை எப்போதுமே இவர் பேசிய தவறியதே இல்லை.

இதுவரை தமிழ்நாட்டில் எம்ஆர் ராதா என்றாலே அவர் எம்ஜிஆரை துப்பாக்கியில் சுட்டவர் என்பதுதான் எல்லோருக்கும் தெரியும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை ஒருவர் சுட்டுக் கொண்டாலும், அதன் பின்னர் பொதுவெளியில் நட்பையும் பாராட்டி வந்தார்கள். இன்றுவரை எம்ஜிஆரின் வரலாற்றில் எம் ஆர் ராதாவின் பெயர் இருக்கும். அதேபோன்றுதான் எம் ஆர் ராதாவின் வரலாறும்.

Also Read:எம்ஜிஆர்க்காக உயிரைக் கொடுக்க ரெடியாக இருந்த 5 பாடிகாட்ஸ்.. புரட்சித் தலைவரின் வெற்றிக்கு இவங்களும் காரணம்

அப்படிப்பட்ட எம் ஆர் ராதா அந்த காலத்திலேயே ஆறு திருமணங்கள் செய்திருக்கிறார். சரஸ்வதி, தனலட்சுமி, பிரேமாவதி, ஜெயம்மாள், பேபி, கீதா போன்றவர்கள் தான் இவருடைய மனைவிகள். மேலும் நடிகைகள் ராதிகா, நிரோஷா, நடிகர் ராதாரவி போன்றவர்கள் எம் ஆர் ராதாவின் சினிமா வாரிசுகள் ஆவார்கள்.

நடிகர் ராதாரவி கூட சில பேட்டிகளில் தன்னுடைய அப்பாவின் சொந்த வாழ்க்கையை பற்றி பேசும் பொழுது, அவர் எத்தனை கல்யாணம் பண்ணி இருந்தாலும் ஒரு மனைவியை கூட கைவிடவில்லை. அத்தனை பேருக்கும் சொந்த வீட்டிலிருந்து, சொத்து வரை சேர்த்து வைத்து தான் போயிருக்கிறார் என்று பெருமையாக சொல்லுவார்.

Also Read:எஸ்ஜே சூர்யாவுக்கு இப்படி ஒரு மனநோயா.? பயில்வான் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -