ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

சோறு போட்டவரை மறந்த விடுதலை சூரி.. நன்றி கெட்டவன் என ஆதங்கத்தில் கூறிய பிரபல நடிகர்

நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக வளம் வந்து, தற்போது விடுதலை படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் .இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் சூரி நடித்த நிலையில், தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதுவும் ஹீரோ கதாபாத்திரங்களுக்கு தான் பட வாய்ப்புகள் முக்கியமாக வருகிறதாம்.

இதனிடையே ஆரம்பத்தில் ஒரு வேலை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் சென்னை வந்தவர் தான் நடிகர் சூரி. அந்த சமயத்தில் சிறு வேலைகள் முதல், படங்களில் சிறு கதாபாத்திரம் வரை சூரி தனக்கு வந்த அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி நடித்து, இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக மாறிவிட்டார். இதனிடையே தற்போது பேர், புகழ் என வாங்கிய சூரி இன்று நன்றி மறந்துள்ளதாக பிரபல நடிகர் கூறியுள்ளார்.

Also Read: சூரியின் நடிப்பில் மிரட்டிய விடுதலை.. ரெண்டு மணி நேரத்தில் ஹார்ட் பீட்டை எகிற செய்த கதைக்களம்

தமிழில் நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேலு உள்ளிட்டோருடன் இணைந்து பல படங்களில் நடித்து சிரிக்க வைத்தவர் தான் நடிகர் போண்டாமணி. அண்மையில் இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் தனது மருத்துவ செலவுக்கு யாரேனும் உதவி செய்யுமாறு இவர் கையெடுத்து கும்பிட்டு கேட்ட அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் கண்கலங்கச் செய்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் முதல் திரைப்பிரபலங்கள் வரை, அவரை நேரில் சந்தித்து மருத்துவ உதவி முதல் பல உதவிகளை செய்து வந்தனர். அதன் பின் குணமாகி வீடு திரும்பிய போண்டாமணி, தனக்கு உதவி செய்த பிரபலங்களுக்கு இணையதள பேட்டிகள் மூலமாக தனது நன்றியை தெரிவித்து வருகிறார். அந்த வகையில், நடிகர் சூரி தான் செய்த உதவிகளை மறந்து நன்றி கெட்டவனாக உள்ளார் என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.

Also Read: விஜய், கமலை போல வாரி வழங்கிய வெற்றிமாறன்.. உச்சகட்ட மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு

நடிகர் சூரி சென்னைக்கு வந்த சமயத்தில் போண்டாமணி, அவரது வீட்டில் தங்க வைத்து சூரிக்கு சாப்பாடு எல்லாம் கொடுத்து பார்த்துக்கொண்டாராம். மேலும் அந்த சமயத்தில் ஒரு நகைச்சுவை தொடரில் நடிக்க காதல் சுகுமாரனுடன் இணைந்து சூரி நடிப்பாராம். அப்போது தினக்கூலியாக போண்டாமணி சூரிக்கு 200 ரூபாய் வரை சம்பளமாக கொடுப்பாராம்.

அப்படி சூரியின் ஆரம்பகாலத்தில் உறுதுணையுமாக இருந்த தன்னை மறந்து, தான் உடல்நலம் பாதிக்கப்பட்டபோது கூட தன்னை நேரில் வந்து பார்க்காமலும் எந்த ஒரு உதவியும் தற்போது வரை சூரி செய்யாமலும் உள்ளார் என போண்டாமணி ஆதங்கத்துடன் தெரிவித்தார். மேலும் ஒரு போன் பண்ணிக்கூட பேசாமல் இப்படி நன்றி கெட்டவனாக இருப்பது தனக்கு வேதனையளிப்பதாக போண்டாமணி உருக்கமாக கூறியுள்ளார்.

Also Read: குமுறி அழுத போண்டாமணி.. மலைபோல் நம்பிய வடிவேலு செய்த பெரிய துரோகம் 

- Advertisement -

Trending News