புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

பிரதீப்பிற்கு பின் மொத்தமாய் படுக்க இருந்த பிக்பாஸ்.. டிஆர்பியை தூக்கி நிறுத்தியது யாரு தெரியுமா?

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்போதுமே டி ஆர் பி கொடுக்கும் போட்டியாளரை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிகழ்ச்சி முடியும் வரை வீட்டிற்குள்ளேயே தக்க வைத்துக் கொள்வார்கள். பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கூட வனிதா விஜயகுமார் எலிமினேட் ஆன பிறகும், அவரை மீண்டும் வீட்டிற்குள் வைத்திருந்தார்கள். அப்படி இந்த ஏழாவது சீசனில் மூன்று வாரங்களுக்கும் மேலாக பெரிய அளவில் டி ஆர் பி கொடுத்தவர் பிரதீப் ஆண்டனி.

பிரதீப் ஆண்டனி தான் டைட்டில் வின்னர் என்று மக்களே முடிவு செய்த பிறகு, அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். பிரதீப் வெளியே போனதற்குப் பிறகு பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக எந்த கண்டன்டுமே இருந்திருக்காது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மாயா மற்றும் பூர்ணிமாவின் சூழ்ச்சி வலையில் சிக்கி கைப்பாவைகளாக மாறி இருப்பார்கள்.

Also Read:இந்த வார நாமினேஷனில் சிக்கிய 3 போட்டியாளர்கள்.. மூட்டை முடிச்சை கட்ட போகும் சூனிய பொம்மை

பிரதீப்புக்கு பிறகு சுவாரஸ்யம் இல்லாமல் போக இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக மாற்றியவர் அர்ச்சனா தான். அவர் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்து, கேம் சேஞ்சராக மாறினார். வீட்டுக்குள் வந்ததும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிய அர்ச்சனா ஒரு வாரம் கூட தாக்குப் பிடிப்பார் என பார்வையாளர்கள் நினைக்கவில்லை.

கேம் சேஞ்சராக மாறிய அர்ச்சனா

பிரதீப் வெளியேறியதற்கு பிறகு அர்ச்சனா மக்களின் குரலாக ஒவ்வொருவரையும் கேள்வி கேட்டதன் மூலம் பிக் பாஸ் பார்வையாளர்களிடையே வரவேற்பை பெற்றார். ஒவ்வொரு வாரமும், இவர் சில பிரச்சனைகளுக்கு குரல் எடுத்துப் பேசியது, மாயா மற்றும் பூர்ணிமாவின் உண்மையான முகத்தை போட்டியாளர்களுக்கு காட்டியது, நிக்சனை அலற விட்டது என அடுத்தடுத்து சம்பவம் பண்ணினார் அர்ச்சனா.

தனக்கு ஆதரவாக இருந்த விசித்ரா மீது அதிக நம்பிக்கை மற்றும் மரியாதை வைத்திருந்த அர்ச்சனா, அதே நேரத்தில் தனக்கு எதிராக விசித்திரா திரும்பும் பொழுது அவரையும் எதிர்த்து கேள்வி கேட்டார். பிரதீப் ஆண்டனிக்கு பிக் பாஸ் ஆடியன்ஸ்கள் இடையே எந்த அளவுக்கு கைதட்டு கிடைத்ததோ, அதே அளவுக்கு அர்ச்சனாவுக்கு இப்போது கைதட்டுகள் கிடைக்கிறது.

வீட்டுக்குள் வந்த வாரம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்த அர்ச்சனாவா இது என பிக் பாஸ் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் கடந்த வாரம் திமிரு ஈஸ்வரி கேரக்டரில் அர்ச்சனா டாஸ்க் பண்ணியது மிகப் பெரிய அளவில் ரீச் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் பிரதீப் ஆண்டனிக்கு பிறகு ஏறியது என்றால் அது அர்ச்சனாவால் மட்டும் தான்.

Also Read:பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை மறக்க முடியாத 6 ஃபேமிலி என்ட்ரிகள்.. ஒரே அறையில் ஃபேமஸான பிரதீப்

- Advertisement -

Trending News