விஜய்க்கு பெரிய முட்டு கொடுக்கும் அண்ணன்.. நம்ம குட்டு வெளி வந்துரும்னு நியாயப்படுத்தும் நடிகர்

Vijay: விஜய் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்ததும் அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அவர் நடித்து வெளிவரும் படங்களில் ஏதாவது ஒரு சிக்கலை ஏற்படுத்தி அவருக்கு அவப்பெயரை கொடுக்கனும் என்று பலரும் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்த்து வருகிறார்கள்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு லட்டு மாதிரியான விஷயங்கள் லியோ படத்தின் மூலம் தொடர்ந்து கிடைத்து வருகிறது. அதாவது ஆரம்பத்தில் விஜய் புகை பிடிப்பது போல் எப்படி நடிக்கலாம் என்று சர்ச்சை கிளம்பியது. ஆனால் இதெல்லாம் எனக்கு அசால்ட்டு என்று ஒரு டிஸ்க்ளைமர் மட்டும் போட்டுவிட்டு அவதூறாக பேசிய வாயை அடைத்துவிட்டார்கள்.

Also read: விஜய்யை விட பல மடங்கு உயர்ந்த மகேஷ் பாபு.. இவங்கள வச்சுக்கிட்டு ஆணிய புடுங்க முடியாது

இதனை தொடர்ந்து சமீபத்தில் ட்ரெய்லர் வெளியானதை ஒட்டி ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இவர் மீது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. அதில் முக்கியமாக விஜய் பேசிய ஒரு கெட்ட வார்த்தை இவர் மீது புகார் கொடுக்கும் அளவிற்கு போய்விட்டது. இன்னொரு பக்கம் மாதர் சங்கத்திலிருந்து இவருக்கு எதிராக போர் கொடியை தூக்கி வருகிறார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இவருக்கு சப்போர்ட்டாக சீமான் பேசி வருகிறார். அதாவது விஜய் பேசிய கெட்ட வார்த்தை, பொதுவாக வீட்டில் இயல்பாக பேசக்கூடிய ஒரு வார்த்தை தான். இதுல என்ன தப்பு இருக்கு என்று விஜய்க்கு முட்டுக் கொடுத்து வருகிறார். அத்துடன் வடசென்னை படத்துல கூட நிறைய கெட்ட வார்த்தைகள் பேசப்பட்டிருக்கிறது.

Also read: ஜெய்ப்பதற்கு ரஜினி பயன்படுத்தும் ஃபார்முலா.. அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய்

அப்பெல்லாம் யாரும் வந்து வாயைத் திறக்கல. இப்ப விஜய் பேசி இருக்கிறார் என்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டு வைப்பது எந்த விதத்தில் நியாயம் என்று சீமான் சொல்கிறார். இதெல்லாம் அவர் அரசியலில் இறங்குகிறார் என்று தெரிந்ததனால் அவருக்கு விரிக்கப்பட்ட வலை தான் என்று கூறுகிறார்.

அத்துடன் விஜய்க்கு எதிராக தற்போது ஒரு வார்த்தை பேசினாலும் அது நமக்கு எதிராக திரும்பி விடும் என்ற பயத்திலும் சீமான் அடக்கியே வாசிக்கிறார். காரணம் அவர் சில விஷயங்களில் கரெக்டாக இல்லை. அப்படி விஜய்யை பற்றி தவறாக ஒரு வார்த்தை பேசினாலும் நம்ம குட்டு வெளிவந்திரும் என்று விஜய் பேசிய கெட்ட வார்த்தையை நியாயப்படுத்தி வருகிறார். இதை தான் சாணக்கியதனம் என்று சொல்வார்கள்.

Also read: லோகேஷிடம் பலிகாடாக மாட்டிய விஜய்.. லியோ படத்தில் ஏமாறப்போகும் 3 விஷயங்கள்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்