வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ஜெய்ப்பதற்கு ரஜினி பயன்படுத்தும் ஃபார்முலா.. அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய்

Rajini Victory Secret: எத்தனையோ நடிகர்கள் புதுசு புதுசாக வந்தாலும், இவருடைய நடிப்புக்கு ஈடாகுமா என்று சொல்வதற்கு ஏற்ப தன்னுடைய 72 வயசிலும் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை தன் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். சினிமாவைப் பொறுத்தவரை இது ஒன்றும் சாதாரண விஷயம் கிடையாது.

ஏனென்றால் ஒரு சில படங்களில் தொடர்ந்து தோல்வியை கொடுத்தால் அவ்வளவுதான் அவர்களுடைய மார்க்கெட் காலியாகிவிடும். ஆனாலும் இதையெல்லாம் கடந்து வந்து இப்பொழுதும் வெற்றியுடன் உலா வருகிறார் என்றால் அது இவருடைய சாமர்த்தியம் தான். அந்த வகையில் எப்படி சினிமாவில் தொடர்ந்து நிலை நிறுத்திக் கொண்டு முதலிடத்தில் நிற்கணும் என்ற பார்முலாவை நன்கு அறிந்திருக்கிறார்.

Also read: 40 வயசு கொள்ளை அழகுடன், துள்ளலான சிரிப்புடன் உலா வரும் ரஜினி.. தலைவர் 170 படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம்

அதாவது ஒரு காலத்தில் ரஜினிக்கு போட்டியாக பல நடிகர்கள் முன்னணியில் நின்று போட்டி போட்டுக்கொண்டு நடித்து வந்தார்கள். அதில் சரத்குமார், விஜயகாந்த், சத்யராஜ் மற்றும் பல நடிகர்கள் எல்லோரும் ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று நான்கு படங்களில் நடித்து வந்தார்கள். ரஜினி மட்டும் வருடத்திற்கு ஒரு படம் தான் கொடுப்பார்.

இந்த படத்தை நடித்து முடித்துவிட்டு அதன் பின்னர் தான் இவருடைய அடுத்த படத்திலேயே கமிட் ஆவார். அதற்கு காரணம் ஒரு படத்தில் நடிக்கும்போது உருப்படியாக முழு பங்களிப்பையும் கொடுத்தால்தான் வெற்றி அடைந்து அசுர வளர்ச்சியை பெற முடியும் என்று மலை போல நம்பி இருந்திருக்கிறார்.

Also read: ரஜினிய சீண்டி பார்ப்பது முட்டாள்தனம், தெளிவான விளக்கம் கொடுத்த ஞானவேல்.. சரியான தலைவனா இத செய்யுங்க

அதுபோலவே ஒரு படத்தில் நடித்து முடித்த பின்னர் தான் அடுத்த படத்திலேயே நடிக்கப் போவாராம். அத்துடன் இவர் இப்படி ஒரு படத்தில் நடிக்கும் போது தான் மக்கள் இவருடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் ஏக்கத்துடன் இருந்து அடுத்த படத்திற்காக காத்துக் கொண்டிருப்பார்களாம். அந்த சமயத்தில் வரும் படத்திற்கு ஏகபோக வரவேற்பு ரசிகர்களிடம் இருந்து கிடைத்துவிடும்.

இப்படி தான் தொடர்ந்து வெற்றி பார்முலாவை பயன்படுத்தி முன்னணி ஹீரோவாக ஜொலித்து வந்திருக்கிறார். தற்போது இந்த ஐடியாவை பயன்படுத்தி தான் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் விஜய், அஜித், சூர்யா, கமல் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் நடித்து வெளியிடுகிறார்கள்.  அதிலும் விஜய் இந்த பார்முலாவை கெட்டியாக பிடித்து கொண்டு வருகிறார்.

Also read: பாபா படத்தை விட 10 மடங்கு பிரச்சனையை சந்திப்பார் ரஜினி.. தலைவர் 170 க்கு ஜாதி ரீதியாக பகிரங்கமாக வரும் மிரட்டல்

- Advertisement -

Trending News