புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

லோகேஷிடம் பலிகாடாக மாட்டிய விஜய்.. லியோ படத்தில் ஏமாறப்போகும் 3 விஷயங்கள்

Vijay in Leo Movie: சும்மா யார் படத்தைப் பார்த்தா பொறி கலங்கி அல்லு விடுதோ அவர் தான் மாஸ். அந்த வகையில் லோகேஷ் உருவாக்கிய படம் தான் லியோ. இவரின் கதை மற்றும் விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கு கோடான கோடி ரசிகர்கள் தற்போது வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரசிகர்கள் மட்டுமல்லாமல் சின்ன குழந்தைகள் முதல் கொண்டு லியோ படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறார்கள்.

அதற்கு காரணம் விஜய் படம் என்றாலே சில விஷயங்கள் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இருக்கும். அத்துடன் சின்ன குழந்தைகள் ரசித்து பார்க்கக் கூடிய விஷயங்களும் இருக்கும் என்பதால் தான். ஆனால் தற்போது லோகேஷ் அளித்த பேட்டியை பார்க்கும் பொழுது இது எதுவும் இல்லாமல் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் என்பது போல் தோன்றுகிறது.

Also read: வாய தொறந்தா பாலாபிஷேகம், தோரணம் கட்ட ஆள் இருக்காது.. கமல், எம்ஜிஆர் வளர்த்ததை சீரழிக்கும் விஜய்

அதாவது விஜய் வந்துட்டாலே கைதட்டி, விசில் அடித்து ஆர்ப்பாட்டம் செய்வது அவருடைய இன்ட்ரோ சாங்குக்கு தான். அதுவே லியோ படத்தில் இருக்காதாம். அத்துடன் இன்ட்ரோ பைட் சீன் மற்றும் பஞ்ச் டயலாக் போன்ற மாசான விஷயங்கள் விஜய்க்கு வைக்கப்படவில்லை என்றும் லோகேஷ் கூறியிருக்கிறார். ஆனால் ரசிகர்களை பொறுத்தவரை இந்த விஷயங்கள் இருந்தால் தான் அவர்களுக்கு ரொம்பவே குஷியாக இருக்கும்.

அந்த வகையில் மாஸாக எதுவும் இல்லாமல் இருப்பதால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. இதையெல்லாம் லோகேஷ் சொன்னாலும் விஜய்க்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். மாஸ் பஞ்ச் டயலாக் இருந்தால் மட்டுமே ரசிகர்கள் சந்தோஷப்படுவார்கள். அதனால் இந்த சீன் எல்லாம் வேண்டுமென்று கேட்டிருக்கலாமே. எதற்காக லோகேஷ் சொன்னதற்கு அனைத்தும் தலையாட்டிக் கொண்டு இப்படி பலிகாடாக மாட்டியிருக்கிறார் என்பது தெரியவில்லை.

Also read: மனநோயாளி லோகேஷ், சுயநினைவு இல்லாத விஜய்.. லியோவால் வலுக்கும் கண்டனம்

என்னதான் லோகேஷ் அவருடைய பாணியில் படத்தை எடுத்திருந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இருந்தால் மட்டுமே லியோ படத்தை கொண்டாடுவார்கள். அந்த வகையில் வசூலையும் பெற முடியும் என்று தெரிந்தும் ஏன் லோகேஷ், விஜய்யை வைத்து இந்த மாதிரி ரிஸ்கை எடுத்து இருக்கிறார் என்பது புரியவில்லை.

ஆனாலும் கடைசியாக சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை கொஞ்சம் சந்தோஷப்பட வைத்திருக்கிறது. அது என்னவென்றால் இதில் இருக்கக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கான படமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். எது எப்படியோ படத்தைப் பார்த்தால் தான் லியோ படம் விஜய்க்கு கை கொடுக்கிறதா இல்லையா என்று தெரியும்.

Also read: சேர்த்து வச்ச பேரெல்லாம் போச்சு.. ஹாலிவுட் படங்களை காப்பியடித்த லோகேஷ், வம்பில் சிக்கிய லியோ

- Advertisement -

Trending News