முக்கிய நடிகரை கண்டு கொள்ளாத 69 வது பிலிம் பேர் விருது விழா.. நெப்போட்டிசத்தின் உச்சத்தில் பாலிவுட் உலகம்

filmfare
filmfare

69th Filmfare Awards: இந்தியத் திரையுலகினரால் ஆஸ்காருக்கு சமமாக பார்க்கப்படும் விருதுதான் பிலிம்பேர் விருதுகள். 69ஆவது ஆண்டு பிலிம் பேர் விருதுகள் சமீபத்தில் நடைபெற்று இருக்கிறது. இந்த விழாவில் குறிப்பிட்ட இரண்டு படங்கள் பெரிய அளவில் விருதுகளை தட்டிச் சென்று இருக்கின்றன. இருந்தாலும் பாலிவுட் உலகம் நெபோட்டிசத்தின் கையில் அதிகமாக சிக்கி இருக்கிறதோ என சந்தேகத்தை கிளப்பும் வகையில் இந்த விழா அமைந்துவிட்டது.

சில வருடங்களாக பாலிவுட்டில் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும் வகையில் ஹிட் படங்கள் எதுவுமே அமையவில்லை. இந்திய சினிமாவிற்கு அகராதியே நாங்கள் தான் என அலட்டிக் கொண்டிருந்தவர்கள் ஒரு வெற்றியைக் கூட பார்க்க முடியாமல் திணறி வந்தார்கள். அதே நேரத்தில் தென்னிந்திய படங்கள் சில உலக அரங்கில் உற்று நோக்கும் அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

பாலிவுட் உலகம் மிகப் பெரிய சருக்களை சந்தித்து கொண்டிருந்தபோது அதை தலை நிமிர செய்தவர் என்றால் அது ஷாருக்கான் தான். பதான் என்னும் படத்தின் மூலம் இந்தி சினிமா இன்னும் துவண்டு விடவில்லை என்பதை நிரூபித்து காட்டினார். அதைத் தொடர்ந்து ஷாருக்கான் ஜவான் மற்றும் டங்கி என இரண்டு படங்களை கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட பாலிவுட் உலகத்தை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்.

Also Read:அனிமல் படத்தை காரி துப்பிய சினிமா பிரபலங்கள்.. சைடு கேப்பில் கொண்டாடப்படும் நெல்சன்

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஷாருக்கானுக்கு இந்த வருடத்தின் பிலிம்பேர் விருதுகள் எதுவுமே கொடுக்கப்படவில்லை. சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை ஷில்பா ராவ் என்பவர் பதான் படத்தின் பாடலுக்காக வாங்கி இருக்கிறார். அதேபோன்று ஜவான் படத்தின் சண்டை பயிற்சியாளர் சிறந்த சண்டை என்ற கேட்டகிரியில் விருது வாங்கி இருக்கிறார். விக்கி கவுசல் சிறந்த துணை நடிகருக்கான விருதை டங்கி என்னும் படத்திற்காக வாங்கி இருக்கிறார்.

69 வது பிலிம் பேர் விருது விழா

இந்த வருடத்தின் இறுதியில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை சந்தித்த படம் தான் அனிமல். ஆனால் இந்த படம் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் ஏகப்பட்ட விருதுகளை வாரி குவித்திருக்கிறது. படத்தின் கதாநாயகன் ரன்பீர் கபூர் தான் சிறந்த நடிகர் என்ற விருதை தட்டிச் சென்று இருக்கிறார். அதேபோன்று அவருடைய மனைவி ஆலியா பட் இந்த வருடத்திற்கான சிறந்த நடிகை விருதை வாங்கி இருக்கிறார்.

இந்தி திரை உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 12த் பெயில் என்னும் படம் ஒரு சில விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது. இந்த வருடம் ஷாருக்கான் படங்கள் ஒரு சில கேட்டகிரிகளில் வந்திருந்தாலும், அவருக்கு விருது கொடுக்காமல் இருந்தது அவருடைய ரசிகர்களுக்கு ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதிலும் அனிமல் படத்தில் சிறந்த நடிகர் என்னும் விருதை பெற்றிருப்பது பாலிவுட் உலகில் நெப்போடிசம் அதிக அளவில் தலை தூக்கி விட்டதோ என்ற சந்தேகமும் வந்திருக்கிறது.

Also Read:சூர்யா vs ரன்பீர் கபூர்.. புது புரளியை கிளப்பி மொத்தமாய் வாங்கி கட்டி கொள்ளும் வடக்கன்ஸ், அட! இது வேற லெவல் சண்டை

Advertisement Amazon Prime Banner