பான் இந்தியா லெவலில் பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் தற்போது மீடியாவில் பேசும் பொருளாக மாறி இருக்கிறார். கடந்த வருடம் பிரம்மாண்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் அம்மணி வெப் தொடரில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
அப்படித்தான் இவர் சமீபத்தில் நடித்திருந்த ஒரு வெப் தொடர் மாபெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் நடிகை அதில் எக்குத்தப்பாக நடித்திருந்ததை பார்த்த பலரும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டனர். அந்த அளவுக்கு நடிகை பிரபல ஹீரோவுடன் ஒவர் நெருக்கம் காட்டி நடித்து இருந்தார்.
Also read: வசியம் செய்த ஓமனக்குட்டி, குட்டி போட்ட பூனையாக சுற்றி வரும் ஹீரோ.. வாரிசு வளராம இருந்தா சரிதான்
இதைக் கூட ஏற்றுக் கொண்ட ரசிகர்களால் நடிகையின் லிப்லாக் காட்சியை தான் சகித்துக் கொள்ள முடியவில்லை. ஏனென்றால் நடிகை 66 வயது நடிகருடன் படு நெருக்கமாக நடித்திருந்தார். இதுவே சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில் அந்த லிப்லாக் காட்சியை 30 முறைக்கு மேல் எடுத்தார்கள் என்ற செய்தி தான் பகீர் கிளப்பி உள்ளது.
நடிகரே இப்படி ஒரு காட்சியில் நடிக்க தர்ம சங்கடத்தில் நெளியும் போது நடிகை கேஷுவலாக அதில் நடித்ததை பார்த்து படக்குழுவினரே ஆச்சரியப்பட்டு போயிருக்கிறார்கள். இது எல்லாவற்றிற்கும் மேலாக அம்மணி எத்தனை டேக் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது தான் ஹைலைட். தன்னுடைய மார்க்கெட் குறையக்கூடாது என்பதற்காகத்தான் நடிகை இந்த அளவுக்கு இறங்கி நடிக்கிறாராம்.
அதிலும் சமீப காலமாக வெளிவரும் வெப் தொடர்கள் அனைத்தும் ஏ ரகமாகவே இருக்கிறது. ஏனென்றால் படத்திற்கு இருக்கும் சென்சார் ஓடிடி தளத்திற்கு கிடையாது. அதனாலேயே முன்னணி நடிகைகள் கூட போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி களத்தில் குதித்துள்ளனர். இப்படியே சென்றால் திரையுலகின் நிலைமை என்ன ஆகும் என்று பலரும் வெளிப்படையாகவே கதறி வருகின்றனர்.
Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்