Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

வசியம் செய்த ஓமனக்குட்டி, குட்டி போட்ட பூனையாக சுற்றி வரும் ஹீரோ.. வாரிசு வளராம இருந்தா சரிதான்

பிரபல ஹீரோ ஒருவர் தன்னுடன் நடித்த சக நடிகையின் மேல் உள்ள ஆசையால் குடும்பத்தையே மறந்து விட்டு இருக்கிறாராம். மனைவி, குழந்தை என்று வாழ்ந்து வந்த நடிகர் தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை எல்லாம் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது பலருக்கும் தெரியும். அதன் பிறகு அவர்களை அவர் கண்டு கொள்ள மாட்டார்.

ஆனால் ஒரு நடிகையின் பின்னால் மட்டும் நடிகர் குட்டி போட்ட பூனையாக சுற்றி வருகிறாராம். சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கும் இந்த ஜோடி தற்போது ரகசிய குடித்தனம் நடத்தி வருவது தான் பலரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது. மேலும் அக்கட தேசத்திலிருந்து வந்த இந்த ஓமன குட்டி அப்படி என்னதான் சொக்கு பொடி போட்டாரோ என்று பலரும் வெளிப்படையாகவே தங்கள் அதிர்ச்சியை காட்டி வருகின்றனர்.

Also read: சம்பளமே இல்லாமல் ஐட்டம் டான்ஸ் ஆடுறேன்.. ஸ்டைலிஷ் ஹீரோவுடன் நடிக்க அலையும் கிளாமர் நடிகை

ஏனென்றால் நடிகர் இப்போது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் கிடைக்கும் கேப்பில் எல்லாம் நடிகையை பார்க்க பறந்து வந்து விடுகிறாராம். அது மட்டுமல்லாமல் நடிகை தன் குடும்பத்தையே மறந்து விட்டு சதாகாலமும் அந்த ஹீரோவின் அரவணைப்பிலேயே இருக்கிறாராம்.

அதற்கு ஏற்றார் போல் நடிகர் தனியாக ஒரு சொகுசு பங்களாவே வாங்கி அந்த ஹீரோயினை அதில் தங்க வைத்திருக்கிறாராம். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்தால் போதும் உடனே நடிகையை பார்க்க வந்து விடுகிறாராம். இப்படி இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டி தான் தற்போது திரையுலகில் சூடான செய்தியாக பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Also read: 20 கோடியை வாங்கிக் கொண்டு ஆட்டம் காட்டிய நடிகை.. கடுப்பில் தயாரிப்பாளர் செய்த சம்பவம்

இது நடிகரின் குடும்பத்திலும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்னதான் வசியம் செய்தார் அந்த நடிகை என ஹீரோயின் மனைவி புலம்பி தள்ளுகிறாராம். நடிகர் நடிப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த நிலையில் அவருடைய பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகி உள்ளது.

இது அவருடைய எதிர்கால திட்டத்திற்கும் கரும்புள்ளியாக மாறிவிடும் என நடிகருக்கு நெருக்கமானவர்கள் வேதனையுடன் புலம்பி வருகிறார்கள். ஆனாலும் இந்த ஜோடி எதையும் கண்டுகொள்ளாமல் என்ஜாய் செய்து வருகின்றனர். போகிற போக்கை பார்த்தால் வாரிசு வளராமல் இருந்தால் சரிதான் என இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பலரும் தலையில் அடித்தபடி செல்கிறார்கள்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்பு வாங்கிய நடிகை.. காலடியில் மயங்கி கிடக்கும் இயக்குனர்

Continue Reading
To Top