அயோத்தியில் சங்கமித்த 3 நண்பர்கள்.. ரஜினிக்கு மட்டும் ஒதுக்கிய சேர், குடும்பத்துக்கு கிடைக்காத மரியாதை

3 friends who met in Ayodhya: இன்று அயோத்தி ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் மிகப் பிரம்மாண்டமான முறையில் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் போயிருக்கிறார்கள். இதனால் அயோத்தி நகரமே திருவிழா மாதிரி கலை கட்டி வருகிறது.

மேலும் அயோத்தி கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்ற சினிமா பிரபலங்களில் மூன்று பேர் நீண்ட கால நட்பை புதுப்பிக்கும் வகையில் சங்கமித்திருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினி தன் மனைவி லதா மற்றும் அண்ணன் சத்திய நாராயணன் இவர்கள் அனைவரையும் கூட்டிட்டு நேற்று சென்னையில் இருந்து கிளம்பி போயிருக்கிறார்.

அதே மாதிரி அமிதாப்பச்சனும், மகன் அபிஷேக் பச்சன் இருவரும் கும்பாபிஷேகத்தில் பங்கேற்று இருக்கிறார்கள். அத்துடன் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆக இருக்கும் சிரஞ்சீவி அவருடைய மனைவி மற்றும் மகன் ராம்சரண் ஆகியவருடன் தனி விமானத்தில் இன்று காலை அயோத்திக்கு கிளம்பி சென்றிருக்கிறார்.

Also read: ரஜினிக்கு வெள்ளையாக இருந்தால் பிடிக்காதா?. 73 வயதில் எனர்ஜியாக இருப்பதன் சீக்ரெட்

அங்கே போன இடத்தில் ரஜினி, அமிதாப் பச்சன் மற்றும் சிரஞ்சீவிக்கு முன் வரிசையில் விஐபி சீட்டை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். ஆனால் ரஜினியின் மனைவி மற்றும் அண்ணனுக்கு முன் சீட்டு கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு தனியாக வேறு ஒரு இடத்தை ஒதுக்கி அதில் அமர வைத்திருக்கிறார்கள்.

ஆனால் ரஜினியோ அங்கே இருக்கும் நிர்வாகிகளிடம் தன் மனைவி மற்றும் அண்ணன் பக்கத்திலேயே அமரும்படி இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். குடும்பத்துடன் தரிசனம் பண்ண வேண்டும் என்று நினைத்த ரஜினியை தனியாக உட்கார வைத்து குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க தவற விட்டார்கள்.

ஆனாலும் ரஜினி விடாப்பிடியாக குடும்பத்தை தன்னுடன் உட்கார வைக்க வேண்டும் என்று நிர்வாகிடம் கேட்டு தன் பக்கத்திலேயே உட்கார வைத்து விட்டார். அடுத்ததாக தனுசும், இவருடைய மகன்களான யாத்ரா மற்றும் லிங்கா ஆகியவுடன் அயோத்தியில் நடக்கும் கும்பாபிஷேகத்திற்கு போயிருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனம் செய்ய படை எடுத்து போயிருக்கிறார்கள்.

Also read: சன் டிவி தலையில் பாரத்தை இறக்கி வைத்த ரஜினி.. வேண்டா வெறுப்பாய் ஒப்புக்கொண்ட கலாநிதி

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்